Sunday, March 7, 2010

சிவகங்கை

* 1.பிரச்னைகளை சமாளிக்க பெண்களுக்கு தேவை போராட்ட குணம் : சமத்துவம் மலர மனம் திறக்கும் 'சக்தி' கள்

சிவகங்கை : "ஆணும், பெண்ணும் நிகரென கொண்டால், அறிவினிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்' என்றார் மகாகவி பாரதி.
"பெண்களாய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும்' என்பது முதுமொழி. மனிதரின் அன்றாட வாழ்வில் பெண்களின் பங்கு உயர்வானது. நம்முடைய பண்பாடு, கலாசார கட்டமைப்பு பெண்களை சார்ந்தே அமைக்கப்பட்டது. அதனுடைய தாக்கம் தான், "தாய் நாடு, தாய் மொழி' என்ற சொல்லாட்சிகள் உருவாகின.
நாம் வணங்கும் ஆறு, மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு, பெண் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெண்களின் மேன்மையை உணர்த்துவதே இதன் நோக்கம். "பெண்கள் இன்றி இவ்வுலகு இல்லை' என்பதை அறிவுறுத்தவே, "சக்தி' என்ற வலுமிக்க சொல் உணர்த்தப்படுகிறது. இவ்வளவு சிறப்பு பெற்ற பெண்களை போற்றுவதே மகளிர் தினம். பெண்மை என்ற மகுடத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், இன்று 100 வது மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
"எதிர்கால சமுதாயம் எப்படி இருக்க வேண்டும், 101 வது மகளிர் தினத்திற்குள் நிறைவேற்ற துடிக்கும் சபதம் என்ன?' என்பது குறித்து, "மாதவம்' புரிந்த சிலர் மனம் திறக்கின்றனர்.
சிவகங்கையை சேர்ந்த பெண்கள் கருத்து:
எஸ்.மலர்விழி, (பொறியாளர்): உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கிடைத்துள்ளது. பார்லிமெண்டில் 33 சதவீத ஒதுக்கீட்டிற்கு பல முறை போராட வேண்டியுள்ளது. 33 சதவீதம் ஒதுக்காதது, ஆண்களுக்கு நிகராக பெண்களை பார்க்க மறுப்பதை காட்டுகிறது. போலீஸ், சட்டம், ராணுவம், விண்வெளி ஆராய்சி துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கு பெறுகின்றனர்.
21 ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளும் வேலையில் ஈவ்டீசிங், வரதட்சணை கொடுமை, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை பார்க்கும் போது பெண் அமைப்புகள் இவற்றிற்கு எதிராக போராட தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த 101 வது உலக மகளிர் தினத்தில் இது போன்ற அகற்றப்படவேண்டும்.
ஜோஸ்பின் கிளாராமேரி, (விடுதி காப்பாளர்) : மகளிர் மசோதாவிற்கு எதிர்ப்பை பார்க்கும் போது பெண் விடுதலைக்காக பாடுபட்ட பாரதியின் கவிதைகள் தான் நினைவிற்கு வருகிறது. பிரச்னைகள் வரும்போது பெண்கள் துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். சமூகத்தில் நடக்கும் அடக்குமுறைக்கு எதிராக போராடவும், பெண்கள் தயாராக வேண்டும். விடுதி மாணவிகளிடம், சமுதாயம், நாடு, பெண்களுக்கு சம உரிமை கிடைக்க போராடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்.
அ.கார்த்திகைராணி, (தலைமை ஆசிரியை, நாட்டரசன்கோட்டை ): ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் சமம் என்பது சமுதாயத்தில் பெயரளவில் மட்டுமே உள்ளது. அனைத்து விஷயங்களிலும் முடிவுகள் எடுக்க சம உரிமை அளிக்கவேண்டும். ஆண்களின் அடக்கு முறையால், முடிவுகள் திணிக்க படக்கூடாது. அந்த பணியை கூட பெண்கள் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும். குடும்பத்தில் வேலைக்கு போகும் பெண்கள் அதிக சம்பளம் வாங்கினாலும் அவர்களது அந்தஸ்திற்கு ஏற்றாற் போல், ஆட்டோ, பஸ்சில் தான் செல்ல வேண்டியுள்ளது. ஆண்கள் குறைந்த சம்பளம் வாங்கினாலும், தனக்கென்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளும் நிலை உள்ளது. இந்த வேறுபாடுகளை களையவேண்டும். ஆண்கள் நோய் வாய்ப்படும்போது, பெண்கள் அவர்களுக்கான வேலைகளை முகம் சுளிக்காமல் செய்கின்றனர். ஆனால், பெண்கள் நோய் வாய்ப்படும் போது மட்டும், ஆண்கள் சுமையாக கருதுகின்றனர். பள்ளி மாணவிகளிடம் சிறு வயதிலிருந்து, பெரிய பெண்ணாகும் வரை சமுதாயத்தில் நடந்துகொள்ளும் முறைகள் குறித்து கற்றுத்தருகிறேன்.
ஞா.பாக்கியம், ரவி பாலா எக்ஸ்போர்ட்ஸ்: சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும், முன்னேற்றம் கண்டுள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இழுபறியாகவே உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வுகள் மாற பெண்களுக்கு கல்வி மட்டுமின்றி தொழிற்கல்வியையும் கற்றுத்தரவேண்டும். எதிர்காலத்தில் யாரையும் சார்ந்து இல்லாமல், சுயமாக தொழில் செய்யலாம். பெண்கள் இன்னும் வெளிஉலக அனுபவத்தை அறியவில்லை. அந்த அனுபவம் கிடைத்துவிட்டால், உறுதியான முடிவுகள் எடுக்க முடியும். தொழிற்சாலைகளில், பெண்களை 33 சதவீதமாவது வேலைக்கு அமர்த்தவேண்டும். பெண் கொடுமையை எதிர்த்து போராட, பெண்களுக்கு போராடும் மனப்பக்குவத்தை, தாய்மார்கள் கற்றுத்தரவேண்டும் என்ற சபதம் எடுப்போம், என்றனர்.
Top
* 2.திருப்புத்தூர் அருகே பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா : 5,000 பேர் பங்கேற்பு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே நெடுமரம் கண்மாயில் நீர்வற்றியதால், அங்கு நடந்த திருவிழாவில் ஏராளமானோர் மீன் பிடித்தனர்.
சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் தேங்கிய நீர் வற்றத் துவங்கிவிட்டன. நெடுமரம் பகுதியில், ஐந்து கி.மீ., சுற்றளவில் உள்ள பெரிய கண்மாயில், நீர் வற்றியதால், அங்கு நேற்று மீன்பிடி திருவிழா நடந்தது. கிராம பெரியவர்கள், அனைத்து கிராம மக்களையும் அழைத்து இலவசமாக மீன் பிடித்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். வாணவேடிக்கைக்கு பின் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நெடுமரம், சில்லாம்பட்டி, ஊர்குளத்தான்பட்டி, உடையநாதபுரம், என்.புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வலைகளுடன் கண்மாயில் இறங்கினர். கண்மாயே தெரியாத அளவிற்கு மனித தலைகளாக காட்சி அளித்தது. ஏராளமான மீன்கள் சிக்கின. அதிகபட்சமாக மூன்று கிலோ எடை கொண்ட மீன் சிக்கியிருந்தது. நெடுமரத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம வீடுகளில் நேற்று "மீன்குழம்பு' சமையல் தான். சுற்றுப்பகுதியில் எந்த கிராமத்திற்குள் நுழைந்தாலும், மீன்குழம்பு வாசனை மூக்கை துளைத்தது.
Top
* 3.ஏட்டுகள் 113 பேருக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு

சிவகங்கை : ராமநாதபுரம், சிவகங்கையில் 113 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி டி.ஐ.ஜி., சந்தீப் மித்தல் உத்தரவிட்டுள்ளார்.
போலீசில் ஏட்டு வரையிலான பதவி உயர்வை எஸ்.பி.,க்களும், எஸ்.ஐ., வரை அந்தந்த டி.ஐ.ஜி.,க் களே பதவி உயர்வு வழங்கலாம் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப் பட்டது. ஆனால், ராமநாதபுரத்தில் 53, சிவகங்கையில் 60 ஏட்டுகளுக்கு பதவி உயர்வுக்கான கால அவகாசம் முடிந்த பின்னரும், ராமநாதபுரம் டி.ஐ.ஜி., பணியிடம் காலியாக இருந்ததால், இரு மாவட்ட ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
பதவி உயர்வு: இதுகுறித்து, தினமலர் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, உடனுக்குடன் ஏட்டுக்களின் பட்டியலை இரு மாவட்டத்திலும் பெற்று 113 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி.,(பொறுப்பு) சந்தீப் மித்தல் உத்தரவிட்டார். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் ஸ்டேஷன் பணி ஒதுக்கி உத்தரவிடுவர்.
Top
* 4.இலவச வீடு வழங்கும் திட்டத்தில் கூட்டு குடும்பத்தினருக்கு சிக்கல்

சிவகங்கை : தமிழக அரசின் இலவச வீடு திட்டத்தில், கூட்டு குடும்பத்தினருக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் குடிசை வீட்டில் குடியிருப்போருக்கு, இலவச வீடு கட்டும் திட்டப்படி 21 லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த வீடுகள் 60 ஆயிரம் ரூபாயில் பயனாளிகள் மூலமே கட்டப்படவுள்ளது. இதற்காக 2,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 385 யூனியன்களிலும், ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன.
கூட்டு குடும்ப சிக்கல்: ஆய்வில், கிராமங்களில் வசிக்கும் பயனாளிகளில் பெரும்பகுதியினர் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இவர்களில் யார் பெயரை பயனாளிகள் பட்டியலில் சேர்ப்பது. யார் கணக்கிற்கு பணம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுறுத்தல் இல்லை. இதனால், பயனாளிகளை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
ஊரகவளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியதாவது: கூட்டுக்குடும்பத்தில் வசிப்போரில், தந்தையின் பெயரில் பட்டா இருந்து, சகோதரர்கள் கூட்டு குடும்பமாக வசித்தால், வீடு கட்டும் பணியை யாரிடம் ஒப்படைப்பது, கிராமத்தில் குடிசை வீட்டை வைத்து விட்டு, வெளியூரில் சிலர் வசிக்கின்றனர். இது போன்ற சூழலில் பயனாளிகளை எப்படி தேர்வு செய்யப்படவேண்டும் என அறிவுரைகள் அரசிடமிருந்து வரவில்லை, என்றனர்.
Top

பொது

* 1.கருத்தரங்கு

காரைக்குடி : அழகப்பா பல்கலை மேலாண்மை நிறுவனம் சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், ""கடுமை யாக உழைத்தால் மட் டுமே, வாய்ப்பு உறுதி செய்யப்படும்,'' என்றார். இயக்குனர் கலியமூர்த்தி பங் கேற் றார். வினோத்குமார் நன்றி கூறினார்.
Top
* 2.ம.நே.ம.க., கூட்டம்

திருப்புத்தூர் : திருப்புத்தூர்- மதுரை, திண்டுக்கல் இணைப்பு சாலையை சீரமைக்க, மனித நேய மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.
கட்சி செயற்குழு கூட்டத்திற்கு, நகர் செயலாளர் சையது அலி தலைமை வகித்தார். தலைவர் கமருல்ஜமான், நிர்வாகிகள் அலிபாபா, சகுபர் அலி, அப்துல் காதர், துணை செயலாளர் வருசை முகமது முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: அச்சுக்கட்டு தெருவில் நமக்கு நாமே திட்ட நிழற்குடை பணியை நிறைவு செய்ய வேண்டும். பேரூராட்சி 12 வது வார்டு, நேருநகரில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க வேண்டும். இரண்டாவது வார்டில் பன்றி தொல்லை போக்க வேண்டும். பெரிய கண்மாய் தாம்போகி கால்வாயில், கழிவு கலப்பதை தடுக்க வேண்டும்.
Top
* 3.கலைப்போட்டி

சிவகங்கை : சிவகங்கை சாஸ்திரி தெருவில் உள்ள மாவட்ட இசைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டி வரும் 11ம் தேதி துவங்குகிறது.
இதில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 11ம் தேதி குரலிசை, பரதநாட்டியம், 12ம் தேதி கருவிஇசை, கிராம இசை, நடனம் நடக்கும். இதில் சேர, மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் வயது, படிப்பு சான்று பெற்று வரவேண்டும். தலா இருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு. சினிமா பாடல்கள் பாடக்கூடாது. தேவையான இசை ருவிகள் கொண்டுவரவேண்டும். பயணக்கட்டணம் கிடையாது. வெற்றி பெறுவோருக்கு பரிசு, சான்று வழங்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது, என இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனலோச்சனி தெரிவித்தார்.
Top
* 4.காங்.,நிர்வாகிகள் தேர்தல்

தேவகோட்டை : தேவகோட்டையில் 27 வார்டுகள், தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றிய அளவில் ஊராட்சிகளுக்கான இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. போட்டியிட்டவர்களுக்கு விமானம், பலூன் சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஓட்டு சீட்டுக்கள் வழங்கி, வார்டுக்கு ஐந்து பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் மையத்திற்குள் ஓட்டு போட்டவர்களை தவிர, யாரும் அனுமதிக்கவில்லை. இதற்கான முடிவுகள் நேற்றே "இன்டர் நெட்'டில் வெளியிடப்பட் டன. சிவகங்கை பொறுப் பாளரான கேரளாவை சேர்ந்த சாஜிதாஸ் மேற்பார்வையிட்டார்.
Top
* 5.என்.எஸ்.எஸ்., முகாம்

சிவகங்கை : நாலுகோட்டையில் மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரி சார்பில், என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் நாராயணசாமி தலைமை வகிக்க, நகராட்சி தலைவர் நாகராஜன் துவக்கி வைத்தார். மாணவர்கள், ஊராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். கால்நடை பராமரிப்பு, இளைஞர் நலம், தேசிய ஒருமைப்பாடு தினம், மகளிர் மேம்பாடு, சாலை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, சிறுசேமிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கு நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட வன அலுவலர் சம்பத்லால் குப்தா, பூலாங்குறிச்சி அரசு கல்லூரி பேராசிரியர் பால்சுயம்பு, நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர், கால்நடை உதவி இயக்குனர் விஸ்வநாதன், மாவட்ட காங்., தலைவர் ராஜரத்தினம், நுகர்வோர் மன்ற மாவட்ட தலைவர் கண்ணப்பன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட அலுவலர் சேகர் பங்கேற்றனர்.
நிறைவு விழா: கல்லூரி முதல்வர் தலைமை வகிக்க, அழகப்பா பல்கலை பதிவாளர் செண்பகவல்லி, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, குணசேகரன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். திட்ட அலுவலர் தங்கதுரை நன்றி கூறினார்.
Top
* 6.நரிக்குறவர் நலவாரியம்

சிவகங்கை : தமிழக அரசு, நரிக்குறவர்களுக்கு நலவாரியம் அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. வாரியத்தில் பதிவு செய்வதற்கு 18 முதல் 60 வயது வரை உள்ள நரிக்குறவர்கள் சேரலாம். உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலம் 10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், இயற்கை மரணம் ஏற்பட்டால் 15 ஆயிரம், ஈமச்சடங்கிற்கு 2 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலும், திருமண உதவித்தொகையாக 2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகையாக 6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்புக்கு 3 ஆயிரம், மூக்கு கண்ணாடிக்கு 500 ரூபாய், முதியோர் பென்சனுக்கு 400 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அல்லது தாசில்தார்களிடமோ வாரியத்திற்கான விண்ணப்பத்தை பெற்று பயன்பெறலாம்.
Top
* 7.பள்ளி வாகனங்களுக்கு கடும் எச்சரிக்கை

சிவகங்கை : விபத்துக்களை தவிர்க்கும் வகையில், பள்ளி, கல்லூரி வாகனங்களை சோதனை செய்ய, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த வாகன சோதனையில், 12 பள்ளி வாகனங்களில் அனுமதி சீட்டு, தகுதி தகுதி இல்லாமை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட குறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்ற பள்ளி வாகனங்களுக்கு, ஒரு மாணவருக்கு 500 ரூபாய் என்ற அடிப்படையில், ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபால் கூறுகையில், "" மாணவர்களின் பாதுகாப்பில், கல்வி நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும். அதிகமாக ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கடும் நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்து கமிஷனர் மச்சேந்திரகுமார் உத்தரவிட்டுள்ளார்,'' என்றார்.
Top
* 8.ஆலோசனை கூட்டம்

காளையார்கோவில் : நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
அவர் பேசுகையில், ""குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதில் தொய்வு ஏற்படும் போது, அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதோடு நின்று விடக்கூடாது. உடனடியாக தீர்வு காண வேண்டும். குறைகள் இன்றி வறுமைக்கோடு பட்டியல் தயாரிக்க வேண்டும். நல உதவி திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயனடைய வழிவகை செய்ய வேண்டும்,'' என்றார். பி.டி.ஓ., க்கள் கிருஷ்ணமூர்த்தி, காளிதாசன், துணை பி.டி.ஓ., சாந்தாமேரி பங்கேற்றனர்.
Top
* 9.கல்விக்குழு கூட்டம்

இளையான்குடி : இளையான்குடி வட்டார வள மையத்தில், கல்விக்குழு கூட்டம் நடந் தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன் மொழி தலைமை வகித்தார். அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சூசைஅருள் முன்னிலை வகித்தார். மேற்பார்வையாளர் ஜவகார் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் சாதிக் அலி அறிக்கை வாசித்தார். பள்ளிகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், இடைநின்ற மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.
Top
* 10.மனுநீதி நாள் முகாம்

சிவகங்கை : இளையான்குடி தாலுகா முனைவென்றி கிராமத்தில் மார்ச் 10, காலை 10 மணிக்கு மனு நீதி நாள் முகாம் கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமையில் நடக்கிறது. பட்டா மாறுதல், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்விக்கடன், பொதுப்பிரச்னை குறித்து மனு கொடுத்து பயன்பெறலாம்.
Top
* 11.வருமுன் காப்போம் முகாம்

இளையான்குடி : ஆக்கவயல் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் செழியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜரத்தினம் முன் னிலை வகித்தார். மருத் துவ அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார். மதியரசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். டாக்டர்கள் செந்தில்குமாரி, ஸ்ரீதர், மாலிக், சலாவுதீன், சந்திரசேகர், ராம்குமார், கண்ணன், லதா, காயத்ரி சிகிச்சை அளித்தனர்.
Top
* 12.மயான ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் புகார்

சிவகங்கை : மயான ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சிவகங்கை அருகே இடையமேலூர் ஊராட்சி, பாரதி நகர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கலெக்டர் மகேசன் காசிராஜனிடம் அளித்த மனு: இலங்கை, பர்மா அகதிகளுக்காக இங்கு ஆறு ஏக்கரில் குடியிருப்பு அமைக் கப்பட்டது. இங்குள்ள மயானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை மீட்டு மயானத்திற்கு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி உறுப்பினர் கண்ணன் கூறுகையில், ""ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய் துறையினர் ஆய்வு செய்துள்ளனர், '' என்றார்.
Top

சம்பவம்

* 1.தொழிலாளர்கள் மீது தாக்குதல்

மானாமதுரை : மானாமதுரை பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கணேஷ்ராம் (24), மாணிக்கம் (24), சங்கர் (23). இவர்கள் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு, நகர் முழுவதும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டனர். காட்டு உடைகுளத்தை சேர்ந்த கண்ணப்பன் (34) என்பவரது வீட்டின் முன் இருந்த நாயை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, ஊழியர்கள் வைத்திருந்த கம்பி, நாயின் கழுத்தை இறுக்கியதில், இறந்துபோனது.
இதில் ஆத்திரமுற்ற, கண்ணப்பன், அவரது உறவினர் முத்து (22) ஆகியோர், கம்பால் தாக்கியதில் காயமடைந்த துப்புரவு தொழிலாளர்கள் மானாமதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கணேஷ்ராம் புகார்படி, மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment