Sunday, March 7, 2010

ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லையாம்!

நடிகை ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை என்று நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருந்த சி.டி., வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சாமியாருடன் ரொம்பவே நெருக்கமாக இருந்த ரஞ்சிதா இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், சர்ச்சையில் ஒரு நடிகை சிக்கியிருப்பதால், நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

நடிகைகள் எல்லோரும் உத்தமிகள் என்பதுபோல பேசி வந்த நடிகர்கள் எல்லாம் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டபோது, செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்த நடிகர்கள் ரஞ்சிதா விவகாரம் பற்றி எங்கே நம்மிடம் நிருபர்கள்‌ கேட்டு விடுவார்களோ என அஞ்சி நிருபர்களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.

சத்யராஜ், சுந்தர் சி இணைந்து நடித்திருக்கும் குரு சிஷ்யன் படத்தின் பிரஸ் மீட்டிற்கு சத்யராஜ் வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நிருபர்களும், சத்யராஜிடம் ரஞ்சிதா விவகாரம் பற்றி கேட்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் சத்யராஜ் அந்த மீட்டிங்கிற்கு வரவே இல்லை. இதேபோல பத்திரிகையாளர்களை ஈனப்பிறவி என்றும், நடிகைகளை பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிய சூர்யாவும், ரஞ்சிதா விவகாரத்தில் இன்னமும் வாய் திறக்கவில்லை.

நடிகர் சங்கம், சாமியாருடன் உல்லாசமாக இருந்து மாட்டிக் கொண்ட நடிகை ரஞ்சிதாவை காக்க சட்ட நடவடிக்கை எடுக்குமா? அல்லது அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் ரஞ்சிதா விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. "அவர் நடிகர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. அப்படியிருக்கும் போது அவரை எப்படி நாங்கள் நீக்க முடியும்?" என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.

நடிகை ரஞ்சிதா 1992ம் ஆண்டு வெளியான நாடோடி தென்றல் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு கிழக்கு வீதி, பேண்டு மாஸ்டர், மதுரை மீனாட்சி, கேப்டன், அதர்மம், என் ஆசை மச்சான், ஜெய்ஹிந்த், வீட்டை பாரு நாட்டை பாரு, அமைதி படை, தோழர் பாண்டியன், பெரிய மருது, அத்தை மகள் ரத்தினமே, தொட்டில் குழந்தை, கருப்பு நிலா, தமிழச்சி, கர்ணா, சின்ன வாத்தியார், சீதனம், பாட்டு வாத்தியார், மக்கள் ஆட்சி, முஸ்தபா, புருஷன் பொண்டாட்டி, பகைவன், நிலவே உனக்காக, உரிம‌ை போர், நாக தேவி, தாஜ் மஹால், மையம், ஆஹா எத்தனை அழகு, சாசனம், அமிர்தம், மாய கண்ணாடி, ஓடும் மேகங்களே, பொம்மலாட்டம், அழகர் மலை உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ரஞ்சிதா, கிருஷ்ணவம்சி, ரோஜா, தெக்கத்தி பொண்ணு ஆகிய டி.வி. தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

Tags: Actress Ranjitha, Nithyanantha, not a Member, Nadigar sangam, Sarathkumar, நடிகர் சங்கம், உறுப்பினர் இல்லை, ரஞ்சிதா, நித்தியானந்தா,

தேனி

* 1.ஆண்டிபட்டி பகுதியில் மாட்டு தீவனங்களுக்கு தட்டுப்பாடு : கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கவலை.

ஆண்டிபட்டி : தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து தீவனத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இறவை பாசனம் உள்ளது. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் தங்கள் உபதொழிலாக கொண்டுள்ளனர். மானாவாரி நிலங்களில் பயிராகும் சிறுதானிய பயிர்கள், பயறு வகைகளின் தழைகளை சேமித்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி கொள்வர். இந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் மானாவாரி நிலங்களில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.
இறவை பாசனத்தில் காய்கறிகள், பூக்கள், கரும்பு சாகுபடி அதிகம் உள்ளது. கால்நடைகளுக்கான தீவனம் இதில் கிடைப்பதில்லை. அதிகமாக கால்நடை வைத்திருப்பவர்கள் இறவை பாசன நிலங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர் சாகுபடி செய்து கொள்கின்றனர். மானாவாரி விவசாயம் குறைந்ததால் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோடை துவங்கும் முன்பே மேய்ச்சல் நிலங்கள் வறண்டு காய்ந்து விட்டதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடிவதில்லை. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் வெளியூர்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து தீவனங்களை வாங்கி லாரிகள், டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். தீவனத்திற்கான செலவு கூடுதலாவதால் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
Top
* 2.மாணவர்கள் நலன் கருதி ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடு

கூடலூர் : பிளஸ் டூ தேர்வு தற்போது நடந்து வருவதாலும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளதாலும், கூடலூர் பகுதியில் ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.
கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டியில் இருந்து ஒலிபெருக்கி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. குழாய் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக்கூடாது. பகல் நேரங்களில் குறைந்த சத்தத்தில் ஒலிபரப்ப வேண்டும். பொதுத் தேர்வு நடக்கும் மையங் களை நோக்கி ஒலிபரப்பும் பெட்டியை வைக்கக்கூடாது. இந்த நடைமுறையை ஏப்ரல் 30 வரை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் மன்ற செயலாளர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், புதுராஜா, செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, தெய்வேந்திரன், முருகன், குணசேகரன், கணேசன், ஒலிபெருக்கு உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ஜெயம், பொருளாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 3.கம்பம் ஓடைக்கரைத் தெருவில் ஆக்கிரமிப்புக்களால் நெருக்கடி

கம்பம் : ஓடைக்கரை தெரு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கம்பம் நகரில் மெயின்ரோடு மட்டுமல்லாது அனைத்து தெருக்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ளன. தெருக்கள் குறுகி, பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக தியாகி வெங்கடாசலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு, காளியம்மன் கோயில் வீதி, கிராமச்சாவடி தெரு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, கம்பமெட்டு ரோடு உள்ளிட்ட பல வீதிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. மெயின்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை சமீபத்தில் அகற்றியது.
நகராட்சி தன் பங்கிற்கு சில தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது. குறிப்பாக ஓடைக்கரை தெருவில் இரண்டு முறை அகற்றியது. ஆனால் அந்த தெருவில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியின் நகரமைப்பு பிரிவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அத்தோடு மிகவும் நெருக்கிடியில் உள்ள தியாகி வெங்கடாச்சலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு உள்ளிட்ட பல தெருக்கள் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்றிய ஓடைக்கரை தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வீதியில் நடுரோட்டில் ஆடுகள் மற்றும் கோழிகள் அறுக்கப்படுகின்றன. இதனால் தெருவில் போகும் பொதுமக்கள் முகம் சுளிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆடு மற்றும் கோழிகள் அடிப்பதற்கென்று நவீன ஆடு அடிக்கும் தொட்டி 22 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால் ஒருவரும் அங்கு செல்வதில்லை. எனவே ஓடைக்கரை தெருவில் மீண்டும் முளைத்துள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், மட்டன் மற்றும் கோழிக்கறி கடைகளை வேறு இடத்திற்குமாற்றவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Top

பொது

* 1.மனுநீதி நாளை புறக்கணிக்க வி.ஏ.ஓ., க்கள் சங்கம் முடிவு

தேனி : மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் தகுதியற்ற மனுக்களுக்கு உதவி வழங்க அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடுகிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன மனுநீதி நாள் முகாமில் ஓய்வூதியம் குறித்த மனுக்கள் மீது ஆய்வு செய்தபின் தகுதியற்ற நபர் என தெரிவிக்கப்பட்டும், சம்பந்தப் பட்ட நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் ஏற்படும் இழப்பினை அதிகாரிகள் மாற்றம் செய்யப்படும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் பாதிப்பு ஏற்படுகின்றன. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தகுதியற்ற நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கட்டாயப்படுத்தினால் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக மனுநீதி நாளை புறக்கணிப்பது என்றும், மார்ச் 23 ல் மாவட்ட அளவில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என் பது உட்பட பல தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
Top
* 2.நூலக பொது நிதியில் புத்தகங்கள் வழங்கல்

தேனி : மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு 61 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் நுலக பொது நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.
மாவட்ட நூலகர் கேசவன் கூறியதாவது: மாவட் டத்தில் 2009-10 ல் ராஜாராம் நூலக அறக்கட்டளை சார்பில் 15 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இது தவிர குடிமைப்பணிகள், குழந்தைகள் புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு 920 ஆங்கில புத்தகங்கள் வந்துள்ளன. நூலக நிதியில் இருந்து 61 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் அனைத்து கிளை மற்றும் ஊரக நூலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளன. 400 குடிமைப்பணிகளுக்கான புத்தகங்கள் நகராட்சி பகுதியில் உள்ள ஒன்பது நூலகங்களுக்கு வழங்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கான 500 புத்தகங்கள் நூலகத்திற்கு வழங்கப்பட உள்ளதுற என்றார்.
Top
* 3.உதவித்தொகை வழங்கும் விழா

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா அளவிலான தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தாசில்தார் சின்னக்காளை, மண்டல துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ.,க்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். 466 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 33 பேருக்கு நலிந்தோர் உதவித்தொகை மற்றும் 32 பயனாளிகளுக்கு திருணம உதவிகள் உட்பட 30 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
Top
* 4.மருத்துவ முகாம்

தேனி : போலீசாருக்கான இலவச காது, மூக்கு தொண்டை சிகிச்சை முகாம் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் ராமசுந்தர் தலைமையில் டாக் டர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் 200 போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Top

பிரச்னைகள்

* 1.வனவிலங்குகள் கணக்கெடுப்பு விபரம்: வெளியிடுவதில் தாமதம்

கம்பம் : மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வனவிலங்கு கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
வனப்பகுதிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவில் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். வனவிலங்குகள் எண்ணிக்கை, எந்த இனம் குறைந்துள்ளது, எது அதிகரித்துள்ளது, காரணம் என்ன, வனவிலங்குளின் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்படும். வழக்கமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு போலில்லாமல் இந்த முறை வனப்பகுதியில் "கிரீன் கவர்' ஏரியா, குறிப்பிட்ட மரங்களின் நிலை போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகளும், மாணவர்களும் பங்கேற்றனர். கணக்கெடுப்பு காலமும் அதிகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்டது.
தேனி வனக்கோட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, ஹைவேவிஸ், மேகமலை உள்ளிட்ட வன சரகங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பு முடிந்து பல நாட்களாகி விட்டபோதும், கணக்கெடுப்பின் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி கூறுகையில், "இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு விபரங்கள் சம்பந்தப்பட்ட சரகங்களில் இருந்து வந்து சேரவில்லை. மேலும் இது ஒரு பெரிய அளவிலான கணக்கெடுப்பு. எனவே சரி செய்து விபரங்களை வெளியிட கால அவகாசம் தேவைப்படும்' என்றார்.
Top

சம்பவம்

* 1.வருசநாடு மலைப்பகுதியில் சந்தேக வாலிபர் கைது

வருசநாடு : வருசநாடு மலைப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்டது ஓயாம்பாறை மலைப்பகுதி. இப்பகுதியில் தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த மாயி என்பவருக்கு இலவம் தோட்டம் உள்ளது. நேற்று இவர் இலவம் காய் பறித்து கொண்டிருந்த போது 38 வயது மதிக்கத்தக்கவர் இந்தியில் பேசி உணவு கேட்டுள்ளார். உணவுக்கு பதிலாக பிஸ்கட் கொடுத்துள்ளனர். சாப்பிட்டுவிட்டு மாயியின் வீட்டை சுற்றி பார்த்துள்ளார். சந்தேகமடைந்த மாயி, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்துள்ளார். விசாரித்ததால் ஆத்திரமுற்ற வாலிபர் மாயியை தாக்கினார்.
இதையடுத்து மாயி, அவரது உறவினர் வனம் உடன் சேர்ந்து அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து பாலகிருஷ்ணன் எஸ்.பி., க்கு தகவல் தெரிவித்தனர். வருசநாடு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கியூபிராஞ்ச் இன்ஸ்பெக்டர் முருகன், ரேஞ்சர் சுந்தரவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட வாலிபர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Top
* 2.மேய்ச்சலுக்கு சென்ற 35 ஆடுகள் பலி

கூடலூர் : ஆனைமலையன்பட்டியை சேர்ந்த சந்திரன் என்பவருக்குச் சொந்தமான 150 ஆடுகள் குள்ளப்பகவுண்டன்பட்டியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வரும் போது 75க்கும் மேற்பட்ட ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளன. உடனடியாக அரசு கால்நடை டாக்டர் குணசேகரன் மயங்கி விழுந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இதில் 35 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
டாக்டர் குணசேகரன் கூறுகையில், "மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் ஏதேனும் மருந்து கலந்த பொருட்களை உணவாக உட்கொண்டிருக்கலாம். இதனால் இறப்பு நேர்ந்திருக்கலாம். பரிசோதனையில் தெரியவரும்' என்றார்.
Top
* 3.போலி சான்றிதழ் வழக்கு போடி வாலிபருக்கு சிறை

போடி : போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வாலிபருக்கு போடி கோர்டில் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது.
போடி - அணைக்கரைப்பட்டி அருகே துரைராஜபுரம் காலனியில் வசிப்பவர் ராஜகுமாரன் (25). இவர், 2001 ல் போடி சி.பி.ஏ., கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு சேர்ந்துள்ளார். மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி கல்வித்துறை மூலம் சரிபார்க்க அனுப்பப்பட்டது. இதில் ராஜகுமாரனின் மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரியவந்தது. கல்லூரி நிர்வாகம் போடி டவுன் போலீசாரிடம் கொடுத்த புகாரில் ராஜகுமாரனை போலீசார் கைது செய்து போடி மாஜிஸ்திரேட் கோர்டில் ஒப்படைத் தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகபூப் அலிகான், ராஜகுமாரனுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Top
* 4.வீட்டு மனை ஆக்கிரமிப்பு

தேனி : கீழ் கூடலூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மா(56). இவருக்கும் காக்கிலி சிக்கைய கவுடர் தெருவை சேர்ந்த ஜெயராஜ்(40) என்பவருக்கும் வீட்டு மனை இடம் வாங்கியதில் பிரச்னை உள்ளது. இது தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்நிலையில் ஜெயராஜ், நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதாக பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் தர்மா புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரின் கூடலூர் போலீசார் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Top
* 5.ஏலச்சீட்டு நடத்தி மோசடி

தேனி : தேனி பாரஸ்ட் ரோடு ஐந்தாவது தெருவை சேர்ந்த ஹரிகோவிந்தன் மனைவி சாந்தி(35). இவர், என்.ஆர்.டி., நகர் ஜவஹர் ரோட்டை சேர்ந்த தாமோதரன்(70) என்பவரிடம் மாதம் 5000 ரூபாய் செலுத்தி ஏலச்சீட்டு சேர்ந் துள்ளார். மொத்தம் 37 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி உள்ளார். சீட்டு முடிந்தும் தாமோதரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் பணம் கொடுக்காமல் தரக்குறைவாக பேசியுள்ளார். சாந்தி புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Top
* 6.திரிணாமுல் காங்., நிர்வாகி மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு

தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் மாநில துணை தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அன்னஞ்சி அருகே பைபாசில் திண்டுக்கல்லை சேர்ந்த காந்தி என்பவருக்கு சொந்தமான 2.89 ஏக்கர் நிலம் இருந்தது. இதை 1992ல் தேனியை சேர்ந்த பாலகுருசாமி "பவர்' எழுதி வாங்கி "பிளாட்' போட்டு கண்டமனூர், வருஷநாடு பகுதிகளை சேர்ந்த 64 பேருக்கு விற்றுள்ளார். 64 பேர் பெயரில் 2000 த்தில் அந்த இடம் பட்டா மற்றும் சப் டிவிஷன் ஆகி உள்ளது. இந்நிலையில் தேனியில் ஸ்ரீ பாலாஜி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் பெரியகுளம் பூந்தோட்ட தெருவை சேர்ந்த வைரமணி(56) என்பவர் காந்தியிடம் இருந்தும், அவரது மகன் அய்யாச்சாமியிடம் இருந்தும் அந்த நிலத்தை வாங்கியது போல் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை கையகப்படுத்தினார்.
இது குறித்து நில உரிமையாளர்களில் ஒருவரான கண்டமனூரை சேர்ந்த கணேசன்(57) புகாரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்கு பதிவு செய்து வைரமணியை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய ஆறுபேரை தேடி வருகின்றனர். கைதான வைரமணி திரிணாமுல் கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் வைரமணி மீது மடிப்பாக்கம் குமரன் தெருவை சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் தனது நிலத்தை மோசடி செய்ததாக நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்தும் விசாரிக்க உள்ளனர். இவர் மீது கோயில் நிலம் அபகரிப்பு உட்பட பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக டி.எஸ்.பி., உமா தெரிவித்தார்.
Top
* 7.தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தேனி யில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் ஷபீர் தலைமை வகித்தார். கம்பம் சட்டசபை தொகுதி குழு தலைவர் கலீல் ரஹ்மான் ஆர்ப் பாட்டத்தை துவக்கி வைத் தார். மாவட்ட செயலாளர் சுல்தான் உட்பட பலர் பேசினர்.

கிருஷ்ணகிரி

* 1.மாற்று திறன் கொண்ட மகளிருக்கு போட்டிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மாற்று திறன் கொண்ட மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் இன்று 8ம் தேதி நடக்கிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:


உலக மகளிர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் போட்டிகளை கலெக்டர் சண்முகம் துவக்கிவைக்கிறார்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை விளையாட்டு திடலில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மகளிர் அனைவரும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம்.



Top
* 2.ஓசூர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் 18ல் ஏலம் ஐந்தாவது முறையாக நடப்பதால் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் நகராட்சி புதுபஸ்ஸ்டாண்ட் கடைகள் ஏலம் வரும் 18ம் தேதி ஐந்தாவது முறையாக நடக்கிறது.
ஓசூர் நகராட்சி சார்பில் ரூ.10 கோடியில் பெங்களூரு சாலையில் புது பஸ்ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. இங்கு, நகராட்சிக்கு நிரந்தரமாக வருமானம் தரக்கூடிய வகையில், 76 கடைகள், இரு ஹோட்டல்கள் கட்டப்பட்டு உள்ளன.வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் ஓசூர் பஸ்ஸ்டாண்ட் வந்து செல்வதால், பஸ்ஸ்டாண்ட் கடைகளில் நடக்கும் வியாபாரம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதனால், கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது. நகராட்சி கவுன்சிலர் தரப்புக்கும், ஆளும் தி.மு.க., நிர்வாகிகள் தரப்புக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடந்த முதல் ஏலத்தில் வியாபாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. அக்டோபர் 21ம் தேதி நடந்த இரண்டாவது ஏலத்தில் குறைந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். நவம்பர் 11ம் தேதி மூன்றாவது முறையாகவும், பிப்ரவரி 11ம் தேதி நான்காவது முறையும் ஏலம் நடத்தப்பட்டது. கடைசி இரு முறை நடந்த ஏலத்தில் வியாபாரிகள் ஆர்வமாக கலந்து கொண்டு கடைகளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். புது பஸ்ஸ்டாண்ட் கடைகள் 19,000 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக 25,000 ரூபாய் மாத வாடகைக்கு ஏலம் போனது. இது வரை நடந்த நான்கு ஏலத்தில் மொத்தம் 16 கடைகள் ஏலம் போனது. இரு கடை ஏலம் உறுதி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெறும் 13 கடைகள் மட்டும் வியாபாரிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 61 கடைகளுக்கும், இரு ஹோட்டல்களுக்கும் வரும் 18ம் தேதி ஐந்தாவது முறையாக ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கீழ் தளத்தில் முக்கியத்தும் வாய்ந்த கடைகள் அனைத்தும் ஏலம் போய் விட்டது. ஹோட்டல்களில் சமையல் செய்ய கூடாது என்றும், உணவுகளை வேறு இடங்களில் தயாரித்து வந்து விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கண்டிப்பான விதிமுறை உள்ளது. இதனால், ஹோட்டல்களை வியாபாரிகள் எந்தளவுக்கு ஏலம் எடுக்க வருவார்கள் என்பது தெரியவில்லை.பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலுக்கு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கோலத்தில் வந்து செல்பவர்களும் வருவார்கள். அவர்கள் பஸ்ஸ் டாண்ட் ஹோட்டல்களை விட்டு வேறு கடைகளுக்கு செல்ல வாய்ப்பில்லை. பஸ்ஸ்டாண்ட் வரும் வெளியூர் பயணிகளை நம்பி மட்டும் ஹோட்டல் வியாபாரம் உள்ளது. ஹோட்டல்களை அதிக மாத வாடகை கொடுத்து எடுக்க வியாபாரிகள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:


ஏலம் விடப்பட்டுள்ள கடைகள் அனைத்தும், தமிழகத்தின் பிற பஸ் ஸ்டாண்ட்களை ஒப்பிடும்போது அதிகப்பட்ச மாதவாடகைக்கு ஏலம் போய் உள்ளது. பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. மீதம் உள்ள கடைகளும் அதிக மாத வாடகைக்கு போகும் வாய்ப்புள்ளது. ஏலம் எடுக்கப்படும் கடைகளின் டெண்டர் உரிமை காலம் முதல் மூன்று ஆண்டுகளாகும். அதன்பின், மாதவாடகை தொகையில் 15 சதம் உயர்த்தி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படும். இந்த நடைமுறை ஒன்பது ஆண்டு காலம் செயல்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
Top
* 3.அரசு பஸ்சில் 'டிவிடி' திருட முயன்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சில் "டிவிடி' பிளேயரை திருட முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மக்கான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் அர்சுணன் (34). இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்கோட்டில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்திய அர்சுணன் கழிவறைக்கு சென்று திரும்பினார். அப்போது பஸ்சில் இருந்த "டிவிடி' பிளேயரை திருடிக்கொண்டிருந்த் வாலிபரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.விசாரணையில், அவர் பாலக்கோடு முகுதின் நகரை சேர்ந்த அஸ்லாம் (26) என தெரிந்தது, அவரை போலீஸார் கைது செய்தனர்.
Top
* 4.ஓசூர் அருகே பெண் மர்ம சாவு கணவர் உள்ளிட்ட 3 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே இளம் பெண் மர்ம சாவு குறித்து கணவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூளகிரி அடுத்த பீர்பள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). இவரது தங்கை கிரிஜா (20). இவருக்கும், தளவாய்பள்ளியை சேர்ந்த பால்ராஜ் (30) என்பவருக்கும் கடந்த எட்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த இரு மாதமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


சமீபத்தில் நடந்த தகராறின் போது, கிரிஜா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ராஜசேகர் தங்கையை சமாதானப்படுத்தி மீண்டும் அவரது கணவர் வீட்டில் விட்டார். நேற்று முன்தினம் தளவாய்பள்ளி ஏரிக்கரையில் உள்ள மரத்தில் கிரிஜா பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். சூளகிரி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்தனர். கிரிஜாவின் அண்ணன் ராஜசேகர், "தனது தங்கையை அவரது கணவர் பால்ராஜ், மாமனார் பாலப்பன், மாமியார் ராஜூ ஆகியோர் அடித்து கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்கவிட்டதாக' போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கதிர்வேலர்(பொறுப்பு) விசாரித்து, பால்ராஜ், பாலப்பன், ராஜு ஆகியோரை கைது செய்தனர்.
Top

பிரச்னைகள்

* 1.சரக்கு வாகன வரி செலுத்த வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: "கர்நாடகா மாநில சரக்கு வாகனம் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் இடை மாநில வரியை செலுத்த வேண்டும்' என ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:



கர்நாடகா மாநில சரக்கு வாகனம் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய நடப்பாண்டுக்கான (2010-11) இடை மாநில வரி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். வரித் தொகையை ரொக்கமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையாகவோ மத்திகிரி பிரிவு சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை நாட்களில் 10 மணி முதல் மதியம் 12 மணிவரை செலுத்தலாம். போக்குவரத்து அல்லாத வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வாகனக்களுக்கு நடப்பாண்டுக்கான வரி வசூல் வரும் 26ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை வாகன உரிமையாளர்கள் செலுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Top

சம்பவம்

* 1.அனுமதியின்றி மணல் எடுத்த லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே நல்லூர் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். வேப்பனப்பள்ளி எஸ்.ஐ., பாலசுந்தரம் மற்றும் போலீஸார் நல்லூர் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரியை போலீஸார் மடக்கி பிடித்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் அட்டக்குறிக்கி ராம்சிங் (50) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
Top
* 2.வியாபாரியை கடத்தி துன்புறுத்திய 5 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை

கிருஷ்ணகிரி: முன்விரோதத்தில் வெல்ல வியாபாரியை கடத்தி துன்புறுத்திய ஐந்து பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்தவர் வெல்ல வியாபாரி ஜெயக்குமார் (45). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் இருந்து வெல்லத்தை வாங்கி வந்து கிருஷ்ணகிரியில் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.வெல்ல வியாபாரம் சம்மந்தமாக ஜெயக்குமாருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் முன் விரோதம் இருந்தது.கடந்த 2005 ஜூலை 19ம் தேதி கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள கடையில் இருந்த ஜெயகுமாரை டாடா சுமோ காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றனர்.

இது குறித்து ஜெயகுமாரின் மனைவி போலீஸில் புகார் செய்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்த வெல்ல வியாபாரிகள் சங்கர், ரவிச்சந்திரன், காந்தி, அறிவு, ராஜமாணிக்கம், ரவி ஆகிய ஆறு பேரும் ஜெயகுமாரை காரில் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தியது தெரிந்து, சம்பவ இடத்துக்கு சென்று ஜெயகுமாரை மீட்டனர். சங்கர் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோசம், வெல்ல வியாபாரிகள் சங்கர், ரவிச்சந்திரன், காந்தி, அறிவு, ரவி ஆகிய ஐந்து பேருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜமாணிக்கம் வழக்கு நடக்கும் போது இறந்துவிட்டார்.
Top
* 3.வெவ்வேறு விபத்தில் 2 பேர் பரிதாப பலி

காவேரிப்பட்டணம்: காவேரிபபட்டணத்தை அடுத்த சவூளூரை சேர்ந்தவர் விவசாயி தீர்த்தகிரி. இவர் காவேரிப்பட்டணத்தை அடுத்த நேருபுரம் அருகே சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த லாரி தீர்த்தகிரி ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரிக்கின்றனர். * காவேரிப்பட்டணம் திம்மாபுரத்தை சேர்ந்தவர் குழந்தை (75). இவர் காவேரிப்பட்டணத்தை அடுத்த சுப்பிரமணியபுரம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Top
* 4.ஒயர் திருடிய 2 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி சேலம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மொபைல்ஃபோன் டவர் உள்ளது. இந்த டவரில் இருந்த 1,600 ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை இருவர் திருடி எடுத்து சென்றதை வாட்ச்மேன் சங்கர் (35) பார்த்து சத்தம் போட்டார். அப்போது, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பர் ஒயரை திருடிய இரு வாலிபரை விரட்டி சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் அவதானப்பட்டி விஜய் (23), தொன்னயன்கொட்டாய் மஞ்சுநாத் (25) என தெரிந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர்

* 1.சர்ச்சை! அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'? திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மீது புகார்

பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை கருத்தில் கொண்டு, திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், படிப்பில் பின்தங்கிய மாணவர் களுக்கு கட்டாய "டிசி' கொடுத்து, வெளியேற்றபட் டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, பண்டிகை நாட்கள், "அட்டஸ்டேஷன்', தேர்வு கட்டணம் என பல்வேறு காரணங் களைக்கூறி, மாணவர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தள்ளது. மேலும், பள்ளியின் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில், படிப்பில் பின்தங்கியிருந்த மாணவர் களுக்கு கட்டாயமாக "டிசி' கொடுத்து, வெளியேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்புகார்களை பட்டியலிட்டு, முதலமைச்சர் தனிப்பிரிவு, பள்ளி கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் அனுப் பப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனுப்பியுள்ள புகார்: பத்தாம் வகுப்பு "பி' பிரிவு மாணவர்கள் நவீன்குமார், ஜாபர், கணேஷ் குமார், மணிகண்டன், "சி' பிரிவு கிருஷ்ணமூர்த்தி, தினேஷ்குமார், கார்த்திக், சிவக்குமார் மற்றும் "ஈ' பிரிவு ஜீவா, சதீஷ் ஆகியோர், கடந்த டிச., - ஜன., மாதங்களில் கட்டாயமாக "டிசி' கொடுத்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.
மாணவர் சேர்க்கையின்போது, அரசு விதிமுறைக்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம், தீபாவளி போன்ற பண் டிகை நாட்களுக்கு கட்டணம் மற்றும் இடைப்பருவத்தேர்வு கட்டணம், விளையாட்டுக்கான பனியன் கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, புகார் அனுப்பப் பட்டுள்ளது.
பெற்றோர் கூறுகையில், "ஒழுங் காக படிக்கவில்லை எனக்கூறி, கையெழுத்து வாங்கிவிட்டு, "டிசி'யை கொடுத்தனர். பாதியில் பள்ளியில் இருந்து நிறுத்தியதால், தற்போது வீட்டில் உள்ளான். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்வுக்கு முன் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், மாணவர்களின் எதிர் காலம் பாதிக்காமல் இருக்கும்,' என்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை கூறியதாவது: யாருக்கும் கட்டாயப்படுத்தி "டிசி' கொடுக்கவில்லை. படிப்பில் விருப்பம் இல்லாத மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வருவதை தானாகவே நிறுத்திவிட்டனர். "ரிவிஷன்' டெஸ்டில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் கூட, பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கும் "டிசி' கொடுத்திருப்போம்.
அரசு விதிமுறைக்கு மாறாக எவ் வித பண வசூலும் செய்யவில்லை. பல வழிகளில் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் எனது சார்பில் செய்கிறோம். பள்ளியின் நிர்வாகம் சிறந்த முறையில், மாணவர்களின் நலனுக்காக செயல் பட்டு வருகிறது, என்றார்.
தனியார் அல்லது அரசு பள்ளி என எதுவாக இருந்தாலும், படிக்காத மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் இருந்து வெளியேற்றுவது அல்லது "டிசி' கொடுப்பதை தவிர்க்க வேண்டும்; படிப்பில் தடுமாறும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, டியூசன் ஏற்பாடு செய்து, அம்மாணவன் தேர்ச்சி அடைவதற்கான முயற் சியை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வர, அரசு தரப்பில் எத் தனையோ திட்டங்கள் வகுக்கப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தப்பட்டால், அம்மாணவன் வேலைக்கோ அல்லது பெற்றோரால் வெறுக்கப் பட்டு, தவறான வழிக்கோ செல்ல நேரிடும்.
விளையாட்டு தனத்தால், படிப் பில் ஈடுபாடு காட்டாமல் உள்ள மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி சிறந்த மாணவனாக உரு வாக்க வேண்டுமே தவிர, பாதியில் வெளியேற்றப்பட்டால், வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மாணவர்களும், தங்களது எதிர் காலத்தை நினைவில் கொண்டு, திறம்பட படிக்க வேண்டும்.


- நமது நிருபர் -
Top
* 2.விளம்பர பேனர் விவகாரம்; அ.தி.மு.க., எச்சரிக்கை

திருப்பூர் : "உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், திருப்பூரில் தி.மு.க., வினரால் வைக்கப்பட்டுள்ள பேனர் களை அகற்றாவிட்டால், நகரெங்கும் விளம்பர பேனர்கள் வைக்கப்படும்' என, அ.தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் நகரப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர், மாநகராட்சியினர் இணைந்து விளம்பர பேனர் களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க.,வினரால் வைக்கப்பட்ட செம்மொழி மாநாட்டு பேனர்கள் மட்டும் அகற் றப்பட வில்லை. குறிப்பாக, மேம்பாலம் பகுதியில் அதிகளவு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
"ரயில்வேக்குச் சொந்தமான இடம் என்பதாலும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி வருவதாலும், மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் நழுவியது. மாநகராட்சி கமிஷனரோ, "பணம் கட்டி ஒப்பந்தம் செய்து, விளம்பரம் செய்துள்ளனர். எனவே, உடனடியாக எடுக்க முடியாது. ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்,' என சப்பைக்கட்டு கட்டினார்.
"கடந்த காலங்களில், அதே பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர்கள், உச்சநீதிமன்ற உத்தரவைக்காட்டி அகற்றப்பட்டன. அப்போது, ஒப்பந்தம் எதுவும் இல்லையா. ஆளும்கட்சி என்பதால், அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். இது பாரபட்சம்; அத்துமீறும் செயல்' என, மற்ற கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், "பேனர்களை அகற்றாவிட்டால், நகர் முழுவதும் கண்டன பேனர்கள் வைக் கப்படும்' என, அ.தி.மு.க., வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.
அ.தி.மு.க., நகர செயலாளர் ஆனந் தன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்சி கூட்டம், டி.எஸ்.பி., தலைமையில் நடந்தது. இதில், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், கட்சிகளின் இதர நிகழ்ச்சிகளுக்கான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி தொடர்பான பேச்சு எழுந்தது; நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன் வைத்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் எடுத்து விட வேண் டும், என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், ஒருதலைப் பட்சமாக அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களை மட்டும் எடுத்து விட்டு, ஆளும்கட்சியினர் வைத்தவற்றை விட்டுவிட்டனர். ஆளும்கட்சியினர், மாநகராட்சி பகுதி எங்கும், உச்சநீதிமன்ற உ“ததரவை மீறி, "ஹோர்டிங்ஸ் போர்டு' வைத்துள்ளனர். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண் டித்து, நகர் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 3.ஆத்துக்கிணத்துப்பட்டிக்கு விடிவு பிறந்தது!

உடுமலை : "ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம குடிநீர் பிரச்னைக்கு, ரூ.12.65 லட்சம் செலவில் பிரதான குழாய்களை புதுப்பித்து ஒரு வாரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்' என, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டு கால பிரச்னைக்கு "தினமலர்' செய்தி எதிரொலியால், நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதால், ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், ஆத்துக்கிணத்துபட்டி ஊராட்சிக்கு தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிமங்கலம் நீரேற்று நிலையத்தில் இருந்து பல்லடம் ரோட்டோரத்தில் ஆறு கி.மீ., தூரத்துக்கு பதிக்கப்பட்டிருந்த பிரதான குழாய்கள் மூலம் கிராமத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது.
மேடான பகுதிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, போதிய அழுத்தம் இல்லாமல் மேல்நிலைத்தொட்டிக்கு குடிநீர் சேரவில்லை. இதனால், கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. மேலும், பல்லடம் ரோடு விரிவாக்க பணிகளின் போது, பிரதான குழாய் முழுவதும் ரோட்டின் மத்தியப் பகுதிக்கு சென்றது. உடைப்பு பணிகளை கூட, சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குடிநீர் பிரச்னைக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பழுதடைந்த பிரதான குழாயை மாற்றி புதிய குழாய் அமைக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். குடிமங்கலம் நீரேற்று நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு பிரதான குழாய் செல்லும் வழித்தடத்தில் ஆய்வு செய்த போது, ஆறு கி.மீ.,க்குள் பிரதான குழாயில் 40 இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பல்லடம் ரோடு மற்றும் கிராம இணைப்பு ரோட்டோரத்தில் பதிக்கப் பட்டுள்ள பிரதான குழாயில் அதிக உடைப்புகள் ஏற்பட்டு, குடிநீர் விரயமாவது கண்டறியப்பட்டது. கிராமத்திலுள்ள மேல்நிலைத்தொட்டி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்த குழுவினர், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதிய தண்ணீர் கிராமத்திற்கு செல்வதில்லை என்பதை கண்டறிந்தனர்.
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த குடிமங்கலம் நீரேற்று நிலையத்திலிருந்து ஆத்துக்கிணத்துப்பட்டி வரை ஆறு கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாய் முழுவதுமாக புதுப்பிக்கப்படும்; சீரான அழுத்தத்தில் குடிநீர் செல்ல ஆத்துக்கிணத்துப்பட்டி பிரிவு வரை 140மிமீ., குழாயும், பிற இடங்களில் 90மிமீ., குழாயும் அமைக்கப்படும். இதனால், நீரேற்று நிலையத்தில் இருந்து கிராம மேல்நிலைத்தொட்டிக்கு நேரடியாக குடிநீர் செல்லும். நீரேற்று நிலையத்திலும் கூடுதலாக மோட்டார் பொருத்தப்படும். பணிகள் முழுவதும் 12 லட்சத்து 65 ஆயிரம் செலவில் ஒருவாரத்திற்குள் முடிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஊராட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தெரிவித்தார். பல ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, கோடை காலத்திற்கு முன்பே கிடைத்துள்ளதால் ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Top
* 4.மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல்; 450 பேர் கைது

திருப்பூர் : தமிழகத்தில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடக்கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், திருப்பூரில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது; 450 பேரை போலீசார் கைது செய்தனர்.
"தமிழகத்தில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் பழைய வளர்மதி குடோன் எதிரில் இருந்த மதுக்கடை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை நுழைவாயில் முன் கட்சி கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் ஹாலிதீன் தலைமை வகித்தார். பொருளாளர் ஷாஜகான், மாநகர செயலாளர் ஹைதர் அலி, இக்பால் உட்பட ஏராளமானோர் மறியலில் பங்கேற்றனர்.
கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஷாஜகான் பேசியதாவது: கடந்த 2008-09ம் ஆண்டுகளில் "டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.13 ஆயிரத்து 500 கோடிக்கு மது விற் பனை நடந்துள்ளது. நடப்பாண்டில், 15 ஆயிரம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் வரும் வருவாயை பயன்படுத்தி, இலவச கலர் "டிவி' உள்ளிட்ட பல கவர்ச்சி திட்டங்களை அரசு நடை
முறைப்படுத்துகிறது.
மதுக்கடைகளை செயல்படுத்தி, அதன்மூலம் மக்களின் உடல் நலத் தை கெடுத்து மருத்துவமனைக்குச் செல்ல வைக்கிறது; அங்கு, அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் சலுகையாக தரப்படுகிறது. குடிமக்களின் குடும்பங்களை கெடுக்கும் வேலையை, அரசே செய்வது ஆரோக்கியமற்ற போக்காக உள்ளது. தேசத்தின் முன்னேற்றமும், மக்களின் ஆரோக்கியமும் போதை கலாசாரத்தால் சீரழிகிறது. எனவே, பூரண மதுவிலக்கு கொள்கையை அறிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், என்றார்.
ரூரல் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, நடராஜ் தியேட்டர் ரோட்டில் உள்ள மண்டத்தில் தங்க வைத்தனர். போக்குவரத்து பாதிப்பு: அதிக போக்குவரத்து உள்ள ரயில்வே மேம்பால ரோட்டில், ரோட்டுக்கு நடுவில் வாகனங்களை நிறுத்தி கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல், அவிநாசி ரோடு, பி.என்., ரோடு மற்றும் மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் தேங்கி நின்றன. 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்த மறியல் போராட்டத்தால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Top
* 5.பஸ் ஸ்டாண்ட் அருகே வழித்தட ஆக்கிரமிப்பு : அகற்றினால் நெரிசல் குறையும்

திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சியம்மன் கோவில் பகுதிக்குச் செல்லும் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகியுள்ள இவ்வழியை அகலப்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு மாற்றினால், பஸ் ஸ்டாண்டுக்குள் டூவீலர்களால் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படும்.
திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்டது காமாட்சியம்மன் கோவில் வீதி. இப்பகுதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு குறுக்குச்சந்து உள்ளது. இவ்வழியாகச் சென்றால், பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள டூவீலர் ஸ்டாண்டுக்கு செல்ல முடியும்.
பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள மாநகராட்சி டூவீலர் ஸ்டாண்டுக்கு, பஸ்கள் உள்ளே நுழையும் பிரதான வழியில் மட்டுமே செல்ல முடியும். டூவீலர் ஸ்டாண்டின் முன்பகுதியிலும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளும் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன.
ஸ்டாண்டில் இருந்து எடுக்கப்படும் டூவீலர்கள், நிறுத்துவதற்காக வரும் டூவீலர்கள் என அனைத்து வாகனங்களும், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியாக குறுக்கு சந்தைப் பயன்படுத்த முடியும். பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சி அம்மன் கோவில் வீதிக்குச் செல்லும் குறுக்கு சந்து, 12 அடி அகலம் உடையது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. போதாக்குறைக்கு, குறுக்குச்சந்தின் ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கப்படாமல், நடுவீதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குழிதோண்டி, வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மாற்றி, ஆக்கிரமிப்பை அகற்றி, ஓரமாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, குறுக்குச்சந்து துவங்கும் இடத்தில், டூவீலர்கள் செல்லும் வகையில் சரிவான பாதை ஏற்படுத்த வேண்டும். டூவீலர் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், இவ்வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என உத்தரவிட வேண்டும். இதன்மூலம், பஸ் ஸ்டாண்டுக்குள் தேவையற்ற நெரிசல் ஏற்படாது.
Top

பொது

* 1.சேவூர் கோவிலில் உழவாரப்பணி

அவிநாசி : சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நேற்று சேக்கிழார் புனிதர் பேரவையினர், உழவாரப்பணி மேற் கொண்டனர்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில், சேவூரில் உள்ள அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நேற்று நடந்தது. அவ்வமைப்பின் செயலாளர் முத்துநடராஜன் தலைமை வகித்தார். பிருந்தாவன் நிட்டிங் உரிமையாளர் மணி துவக்கி வைத்தார்.
கோவிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரம் முழுவதும் பிளீச்சங் பவுடர் தெளித்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டன. சுற்றுப்பாதையில் மண் டிக்கிடந்த புதர் மற்றும் செடி, கொடிகள் அகற்றப் பட்டன. அனைத்து சன்னதிகளும் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டு, குத்துவிளக்கு, பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. உழவார பணியில் சேக்கிழார் புனிதர் பேவையைச் சேர்ந்த 80 பெண்கள் உட்பட 125 பேர் பங்கேற்றனர்.
Top
* 2.முதல்வருக்கு எதிராக போராட்டம் : தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை

திருப்பூர் : "விவசாயிகளை ஏளனமாக பேசிய முதல்வர், வருத்தம் தெரிவிக்காவிட்டால், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்' என, "தமிழ்நாடு கள் இயக்கம்' தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமான "பஞ்ச நிவாரணத் திட்டம்' தற்போது, "தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என்ற பெயரில் அறிமுகமாகி உள்ளது.
பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு நடவுப்பணி மும்முரமாக நடக்கிறபோதும், அடுத்து வரும் களை எடுப்பு மற்றும் அறுவடையின் போதும், அந்தப் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், வேளாண் பணி பெரிய அளவில் முடங்குகிறது. நாட்டில் எந்த பகுதியில் வறட்சி, பஞ்சம், வேலைவாய்ப்பு இல்லையோ, அப்பகுதியில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். காலநிலை அறியாமல் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. கிராம மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம், ஓட்டுக்களைப் பெறும் திட்டமாக திசை மாறி விடக்கூடாது.
"விவசாயத்துக்கு ஆள் வராவிட்டால், விவசாயிகளே இறங்கி வேலை செய்ய வேண்டியதுதான்' என்ற முதல்வரின் பேச்சு, விவசாயிகளை ஏளனம் செய்வதாக உள்ளது. வேளாண் மக்களை நேரில் அழைத்து இத்திட்டத்தின் நன்மை தீமைகளை அரசு அறிய வேண்டும்; தவறுக்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் அறிவிக்கும். இவ்வாறு, நல்லசாமி கூறியுள்ளார்.
Top
* 3.விடுப்பு போராட்டம் நடத்த வருவாய்த்துறையினர் முடிவு

தாராபுரம் : "வருவாய் துறையில் உள்ள காலி பணியிடங் களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தப்படும்' என, மாநில செயற்குழு உறுப்பினர் முருகதாஸ் கூறியுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வருவாய்த்துறையில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர், உதவி யாளர் ஆகிய பெயர்களை இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் 30 சதவீதம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். துணை தாசில் தார் பதவி உயர்வு பட்டியலுக்கான காலியிட எண் ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்க வேண்டும். தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோர்களுக்கு சிறப்பு படியை அதிகரிக்க வேண்டும். அலுவலக உதவியாளர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இருந்து வருவாய்த்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
சுனாமி, தேர்தல், கலர் "டிவி', பாஸ்போர்ட் பிரிவுகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வரும் 10ம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும், என்று கூறியுள்ளார்.
Top
* 4.'ஒழுக்கத்தை கடைபிடித்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்'

அவிநாசி : "தனி மனித ஒழுக்கத்தை கடை பிடித்தால், நிச்சயம் நல்லதே நடக்கும்; ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடையும்' என, அவிநாசியில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
நலம் தரும் நவகோள்களின் ஆன்மிக ஆய்வு கருத்தரங்கம், அவிநாசி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பூவாசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் சொக்கலிங்கம் வரவேற்றார்.
ஜோதிட ஆராய்ச்சியாளர் ஆதவா பேசியதாவது: யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; ஆனால், நவ கோள்களை யாராலும் ஏமாற்ற முடியாது. இவற்றுக்கு இறைவனும் விதிவிலக்கல்ல. கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை அங்கேயே கொட்டினால், குரு தோஷம் ஏற்படும்; நமது செயல்களுக்கான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். சலவை தொழிலாளியிடம், புரோகிதர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும் கடன் சொல்லவே கூடாது.
இறைநிலையை அறிந்து கொள்வது; இயற்கையை அறிவது மூலம் நம்மை நாமே அறியலாம். குடும்பம், சமுதாயம், உலகம் ஆகியவற்றுக்கு நன்மை செய்வதே நமது பிறப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கான உரிமையை இறைவன் நமக்கு அளித்துள்ளான். இன்றைய உலகிலுள்ள 95 சதவீதம் பேர், தெரிந்தே பல செயல்களை செய்து விளைவுகளையும் அனுபவிக்கின்றனர். சிலர் மட்டுமே வாழ்வின் தத்துவத்தை புரிந்து கொண்டு நிம்மதியாக வாழ்கின்றனர்.
நவ கோள்களுக்கு என்று உள்ள அனைத்து துறைகளுமே நமக்கு நன்மையையும், தீமையையும் சரியாக தருகின்றன. இவற்றிலிருந்து யாரும் தப்பவே முடியாது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல; இயற்கைக்கும் சரியாக பொருந்தும். இயற்கையில் ஏற்படும் அனைத்து விளைவுகளுமே நவ கோள்களின் மூலமே ஏற்படுகிறது. மனிதனது பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்த காரணம், அவனது செயல்விளைவுகள் மட்டுமே. அதை உணர்ந்து தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால், நிச்சயம் நல்லதே நடக்கும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடையும், என்றார்.
Top
* 5.உடுமலையில் நாளை குடிநீர் 'கட்'

உடுமலை : உடுமலை நகராட்சி திருமூர்த்தி நகர் தலைமை குடிநீர் பணியிட மெயின் 2வது குடிநீர் திட்ட குழாய்களில், அதிகப்படியான நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.
எனவே, கோடை காலத்தையொட்டி, நீர்க்கசிவுகளை சீரமைக்கும் வகையில், நகர் முழுவதும் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து, காய்ச்சி பருக வேண்டும் என உடுமலை நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Top
* 6.மழை வேண்டி இளைஞர்கள் நடத்திய 'ரேக்ளா' போட்டி

உடுமலை : மழை வேண்டிய உடுமலை அருகே உள்ள ஆமந்தகடவு இளைஞர்கள் நேற்று "ரேக்ளா' போட்டி நடத்தினர்.
இப்பகுதி இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில், இரண்டாம் ஆண்டு ரேக்ளா போட்டி நேற்று நடந்தது. ஆமந்தகடவு-பெரியபட்டி ரோட்டில் நடந்த போட்டிகளை முன்னாள் ஊராட்சி துணை தலைவர் லட்சுமணசாமி துவக்கி வைத்தார். 200மீ., மற்றும் 300 மீ., பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. கேரளா மாநிலத்திலிருந்து அதிகளவு வண்டிகள் பங்கேற்றன. கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்டத்திலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
200 மீ., பிரிவில் 104 வண்டிகளும், 300 மீ., பிரிவில் 60 வண்டிகளும் போட்டியிட்டன. காலை 10.00 மணிக்கு துவங்கிய போட்டி மாலை 6.00 மணிக்கு மேல் நீடித்தது. விவசாய தொழில் செழிக்க பருவமழை வேண்டி ஆமந்தகடவு இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப் பட்ட ரேக்ளா போட்டியை காண சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராம மக்கள் திரண்டனர்.
குடிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறைந்த நேரத்தில் இலக்கு தூரத்தை எட்ட நான்கு கால் பாய்ச்சலில் காளைகளை பாய்ந்து ஒடியதை பார்வையாளர்கள் ரசித்தனர்.
Top
* 7.விரிவாக்க மையங்களில் ஆலோசனை : விண்ணப்பம் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை : "வேளாண் பொறியியல் துறை விண்ணப்பங்களை விவசாயிகள் பதிவு செய்ய வியாழக்கிழமை தோறும் வேளாண் விரிவாக்க மையங்களில் ஆலோசனை மையம் செயல்படும்', என விவசாயிகள் பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஐசோபாம் பயறு வகை பெருக்குதிட்டத்தின் கீழ் வேளாண்துறை சார்பில் விவசாயிகள் பயிற்சி முகாம் பெதப்பம்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. ஆழியார் தென்னை நாற்று பண்ணை உதவி பேராசியர் வாசுகி பங்கேற்று கொண்டைக்கடலை, கொத்தமல்லி சாகுபடியில் இரட்டை சால் பயிர் சாகுபடி, ஊடுபயிர், டி.ஏ.பி., தெளித்தல் உட்பட அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.
வேளாண் உதவி இயக்குநர் சைலஸ் பேசியதாவது: வேளாண்துறை சார்பில் பயறு வகை களின் உற்பத்தியை பெருக்கவும், மக்களின் புரதசத்து தேவையை நிறைவு செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பயறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 எக்டேர் செயல் விளக்கபண்ணைகள் அமைத்திட மானியம் ஒதுக்கப் பட்டுள்ளது. டி.ஏ.பி., உரம், நுண்ணூட்ட சத்துகள் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது என்றார்.
வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் நீலகண்டன் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்தும், விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெதப்பம்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் ஆலோசனை மையம் நடத்தப்படுகிறது என்றார்.
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு குறித்து துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ் பேசினார். வேளாண் அலுவலர் ஷர்மிளாபானு உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 8.பொதுக்குழு கூட்டம்

திருப்பூர் : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் குடிலில் நடந்தது; தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், "ஓய்வு பெற்ற ஊழியர்களின் குறைகளை தீர்க்க முயற்சி செய்வது; ஊதிய உயர்வின் நிலுவைத் தொகையை மாவட்ட கருவூலம் உடன டியாக வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் கலியப் பெருமாள், பொருளாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் சுப்பையன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 9.பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் : பாரதி கிட்ஸ் சேத்ராயம் பள்ளியின் ஒன்பதாவது ஆண்டு விழா, திருப்பூர் சவுடஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
குழந்தைகளுக்கான போட்டியை எம்.எல்.ஏ., கோவிந்தசாமி துவக்கி வைத்தார். முதல் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பட்டம் வழங்கப்பட்டது. யோகா, கராத்தே, இசைவாத்திய திறமைகளை மாணவ, மாணவியர் செய்து காட்டினர். பள்ளி ஆண்டு விழா வில், டி.எஸ்.பி., ராஜா பங் கேற்றார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் ஹேம லதா, பள்ளி தலைவர் முத்துச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 10.சிந்தனை மன்ற கூட்டம்

திருப்பூர் : சிந்தனை மன்ற கூட்டம், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடந்தது.
சமுதாய நிகழ்வுகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட சமுக பிரச்னைகளை மாணவியர் தெரிந்து கொள்ள, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிஷா, மண், கர்ண மோட்சம் என்பன உள்ளிட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. பதியம் இலக்கிய தளத்தின் தலைவர் பாரதிவாசன், மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Top
* 11.தக்காளி வரத்து அதிகம் விலையும் குறைந்தது

திருப்பூர் : கோடை காலம் துவங்கி விட்டதால், தோட்டங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால், மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது.
திருப்பூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு பொங்கலூர், கொடுவாய், பெருந்தொழுவு போன்ற கிராமங்களில் இருந்து தக்காளி மற்றும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. ஜன., மாதத்தில், தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததால், மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு 12 ரூபாய் வரை விலை கிடைத்தது. சில்லரை விற்பனையில், கிலோ 20 ரூபாய்க்கும் அதிகமானது.
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, மூகூர்த்த சீசனாக இருந்ததால் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பிப்., மாதம் துவக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் அதிகரித்தது; தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதியிலும் இருந்து மார்க் கெட்டுகளுக்கு தக்காளி வரத்து உள்ளது. இதனால், விலையும் குறையத்துவங்கிஉள்ளது.
தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று தக்காளி வரத்து அதிகம் இருந்ததால், ஆறு கிலோ கொண்ட கூடை 15 ரூபாய் வரை விற்பனையானது. கடைகளில் சில்லரை விற்பனையாளர்கள் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் வரை விற்பனை செய்தனர். தொடர்ந்து வரத்து அதிகரித்தால், விலை இன்னும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Top
* 12.இலக்கியம் படித்தால் மனம் பக்குவப்படும்'

திருப்பூர் : ""அறிவியல் படிப்பு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்; இலக்கியம் படித்தால் மனம் பக்குவப்படும். ஆங்கிலத்தை படிக்காமல் தவிர்க்க முடியாது; அதே சமயம் தமிழ் மொழியும் முக்கியம்,'' என தமிழ்நாடு தேர்வாணையத்துறை உறுப்பினர் சுப்ரமணியம் பேசினார். பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விழா, "ஸ்பிரிட்சர் 2010' கொண்டாடப்பட்டது; பள்ளி தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தேர்வாணையத்துறை உறுப்பினர் சுப்ரமணியம் பேசியதாவது: கல்வியில் சிறந்து விளங்கும்போது, மதிப்பும் உயர்கிறது. அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் தந்து படிப்பது போல், மொழிப்பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அறிவியல் படிப்பு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்; இலக்கியம் படித்தால் மனம் பக்குவப்படும். ஆங்கிலத்தை படிக்காமல் தவிர்க்க முடியாது; அதேசமயம் தமிழ் மொழியும் முக்கியம். விருப்பமானதை விளைவிக்கும் ஆற்றலை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 14 வயதுக்கு உட்பட்டோர் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. ஏழை மாணவர்கள் வாழ்வில் மேம்பட கட்டாயம் கல்வி கற்ற வேண்டும்.
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி தர அரசு பள்ளிகளால் மட்டும் முடியாது. எனவே தான் தனியார் பள்ளிகள் வரத்துவங்கின. இப்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர், என்றார்.
தொடர்ந்து, விளையாட்டு போட்டி மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி மற்றும் நாடகம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ரேவதி, கோவை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் நடராஜன், கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னாள் இயக்குனர் குமாரசாமி, கோவை சட்டக்கல்லூரி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், விக்னேஷ்வரா நர்சிங் ஹோம் தேவராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 13.மாவட்ட அளவில் கராத்தே போட்டி

திருப்பூர் : திருப்பூர் ரோட்டரி கிளப் மற்றும் கிங் ஆப் கராத்தே சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, ராயபுரம் ரோட்டரி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு அனைத்து தற்காப்பு கலைகள் சம்மேளன மாநில தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார்.
போட்டியில், 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 6-7 வயது கட்டா பிரிவில் ஜெய்சன் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவி பரணி மற்றும் 10 வயது பிரிவில் மாணவன் கார்த்திக் முதல் பரிசு பெற்றனர். 11-13 வயது மாணவியர் பிரிவில், சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவன் ஜெயசூர்யா மற்றும் மாணவர்கள் பிரிவில் பிஷப் உபகாரசாமி பள்ளி மாணவன் பாலசுப்ரமணியம் முதல் பரிசை வென்றனர். பிளாக் பெல்ட் பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி மாணவி பானுபிரதாப்நேகி முதல் பரிசை பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., ராஜா, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி கிளப் உதவி கவர்னர் விவேகானந்தா, தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் நாகேஷ், செந்தில், தங்கமணி, தற்காப்பு கலைகள் சம்மேளன மாவட்ட தலைவர் ராஜா, கிங் ஆப் கராத்தே சங்க இயக்குனர் கமலிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 14.சாயப்பட்டறைக்கு மின் சலுகை அளிக்க பா.ஜ., வலியுறுத்தல்

திருப்பூர் : "சாயப்பட்டறைகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை எதிர்த்து இரண்டு லட்சம் கையெழுத்து பெற வேண்டும்' என்றும் திருப்பூர் பா.ஜ., செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம், அனுப்பர்பாளையத்தில் நடந்தது; மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில், "சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு, மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது போதுமானதாக இல்லை; கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயங்க, சாயப்பட்டறைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும்.
"ஏழை, எளிய மக்கள் பாதிக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளது. விலை உயர்வை கண்டித்து, பாஜ. சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. திருப்பூர் பா.ஜ., சார்பில் இரண்டு லட்சம் கையெழுத்து பெற்று அனுப்புவது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் ராஜகோபால், பொது செயலாளர்கள் விஜயராகவன், ருத்ரகுமார், மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், தமிழ் செல்வன், செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Top
* 15.கோவில்களை இடிப்பதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு

திருப்பூர் : ரோடு அகலப்படுத்தும் பணி என்ற பெயரால், தொடர்ந்து கோவில்களை இடித்து வந்தால், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.
இந்து முன்னணி வடக்கு மாநகர் செயற்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது; மாவட்ட செயலாளர் பாலமுருகன் வழிகாட்டுதல்படி, நடந்தது. கூட்டத்தில், "ரோடுகளை அகலப்படுத்தும் பணி என்ற பெயரால், கோவில்கள் இடிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை மற்றும் திருப்பூர் மேயர் செல்வராஜ் ஆகியோரை கண்டித்தும், இதே நிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்,' என முடிவு செய்யப்பட்டது. நகர செயலாளர்கள் சுரேஷ், கேசவன், குமார், துணை தலைவர் ரவி, பொறுப்பாளர்கள் பெருமாள், ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Top
* 16.இளைஞர் காங்கிரஸ் தேர்தல் விறுவிறுப்பு

திருப்பூர் : திருப்பூர் தெற்கு தொகுதிக்கான இளைஞர் காங்., உட்கட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக துவங்கியது.
இளைஞர் காங்., உட்கட்சி தேர்தல், நாடு முழுவதும் நடந்து வருகிறது. திருப்பூர் தெற்கு தொகுதிக்கான தேர்தல், நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சி 21வது முதல் 52வது வார்டு வரை, நல்லூர் நகராட்சியில் 15 வார்டுகள் என 47 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. நேற்றைய தேர்தலில் காங்., தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓட்டை பதிவு செய்தனர். தேர்தலில் 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் 3,000க்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊராட்சி மற்றும் நகராட்சியில் வார்டுக்கு ஐந்து பேர் கொண்ட கமிட்டி, மாநகராட்சியில் 10 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. தலைவர், துணை தலைவர், பெண் பொது செயலாளர், சிறுபான்மையினர் பொது செயலாளர், தாழ்த்தப்பட்டோருக்கான பொது செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
திருப்பூர் நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் துணை மேயர் செந்தில்குமார் அணிக்கும், முன்னாள் தேசிய செயலாளர் கோபி அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நல்லூர் நகராட்சியின் 15 வார்டுகளில் நடந்த உட்கட்சி தேர்தலில், நகராட்சி தலைவர் விஜயலட்சுமி அணி மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் தங்கவேல் அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Top
* 17.வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 21 தொழில் குழுக்கள்

திருப்பூர் : "பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில், 21 தொழில் குழுக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், ஏதேனும் ஒரு தொழிலை முன்னாள் ராணுவத்தினர் தேர்வு செய்து பயன்பெறலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பி.எம்.ஆர்.ஓய்., மற்றும் ஆர்.இ.ஜி.பி., ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஆறு சிறப்பு அம்சங்களை கொண்ட இத்திட்டத்தில், 21 வகையான தொழில் குழுக்கள் அடங்கியுள்ளன. கைத்தொழில், கிராமப்புற தொழில், தோல் தொழில், பேப்பர் பொருள் தயாரிப்பு, ரப்பர் பொருட்கள் தயாரிப்பு, கட்டட கட்டுமான பொருட்கள் உற்பத்தி, கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் உற்பத்தி, விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி, ஸ்டேஷனரி பொருட்கள், வேளாண் இடுபொருட்கள், பதப்படுத்திய உணவு பொருட்கள், தையல் மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி, பட்டுப்புழு வளர்ப்பு, காயர் பொருட்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி போன்ற தொழில் குழுக்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உற்பத்தி பிரிவில் தொழில் முனைவோருக்கு 25 லட்சம் ரூபாய், சேவைப்பிரிவில் தொழில் முனைவோருக்கு 10 லட்சம் ரூபாய் திட்ட அளவு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்கள் தொழில் துவங்க 95 சதவீதம் வங்கிக்கடனாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 35 சதவீதம் வரை அரசு மானியமாக அனுமதிக்கப்படும். பட்டியலில் இடம் பெற்றுள்ள தொழில்களில் ஏதேனும் ஒரு தொழிலை துவங்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு, கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலம் தேவையான உதவி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Top
* 18.எல்.பி.எப்., நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் : தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எல்.பி.எப்., தொழிற்சங்க, திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எல்.பி.எப்., பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது; கோவை மண்டல முன்னாள் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். திருப்பூர் மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மண்டல தலைவராக கண்ணன், துணை தலைவராக பொன்னுசாமி (பொது), பழனியப்பன் (சுமை தூக்குவோர்), செயலாளராக பழனிசாமி, துணை செயலாளராக நாராயணன், பொருளாளராக வேணுகோபால், செயற்குழு உறுப்பினர்களாக கோவிந்தராஜ், தர்மராஜ், கிரிஸ்டோபர், பாலமாணிக்கம், சிங்காரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பனியன் தொழிற்சங்க பொது செயலாளர் ராமகிருஷ்ணன், கோவை மண்டல செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு மின் கழகத் தொழிற்சங்க அமைப்பு செயலாளர் சின்னக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Top
* 19.மருத்துவமனை சுற்றுசுவர் விழும் அபாயம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு, தேங்கியுள்ள கழிவுநீரால் சுற்றுசுவர் விழும் அபாயத்தில் உள்ளது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பஸ்ஸ்டாப்பில் உள்ள டீ ஸ்டால்கள், கடைகளிலிருந்து கழிவு விடப்படும் நீர், மருத்துவமனை முன்புறம் உள்ள சுற்றுசுவரில் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக நீர் இப்படி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மாலை நேரங்களில் கொசு அதிகமாக பரவுகின்றது. இதனை மருத்துவமனை ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.
மழைக்காலங்களில் தண்ணீர் மேலும் அதிகமாக தேங்குவதால், சுற்றுசுவர் விழுந்து விடும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுவராக இருப்பதால் எப்போது வேண்டுமானலும் விழும் அபாயம் உள்ளது. மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாய்கள் ஆங்காங்கு உடைந்துள்ளன. அடுத்த இரண்டு மாடியிலும் சுவரை ஒட்டியபடியே தண்ணீர் விழுகிறது; சுவர் முழுவதும் பாசி பிடித்துள்ளது. கட்டடத்தில் இருக்கும் கான்கீரிட் கம்பிகள் தொடர்ந்து ஈரம் ஆவதால், பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. கட்டடத்தில் பாதிப்பு ஏற்படும் முன், மருத்துவமனை நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
Top
* 20.நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை

திருப்பூர் : அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் வகையில், நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய, சீர்மரபினருக்கும், நரிக்குறவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நெல்லைவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், சீர்மரபினர் நல வாரியமும் செயல்பட்டு வருகிறது. அதே அமைச்சகத்தின் கீழ், தமிழ்நாடு நரிக்குறவர் வாரியம் செயல்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், சீர் மரபினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். உறுப்பினர்களாக பதிவு செய்பவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரால் அடையாள அட்டை வழங்கப்படும்.
அதே போல், நரிக்குறவர்களுக்கு கல்வி, மாற்றுத் தொழில் புரிவதற்கான உதவி மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க, தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். தகுதி உடையவர்கள், உறுப்பினராக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவர். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 21.லாரி, வேன் வாடகை உயர்வு

திருப்பூர் : டீசல் விலை உயர்வால், லாரி மற்றும் வேன் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
"திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேசன்' வெளியிட்டுள்ள அறிக்கை: டீசல் விலை உயர்வால், லாரி மற்றும் வேன் வாடகை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 22.கல்குவாரி அருகே குடியிருப்பு மின் இணைப்பு வழங்க முடிவு

திருப்பூர் : "கல்குவாரி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கலாம்,' என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் கணபதி நகர், நெசவாளர் காலனி அருகே கல்குவாரி உள்ளது. கல்குவாரிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் வரை புகார் தெரிவித்தும், பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்தது. கடந்த மாதம் 19ம் தேதி, அப்பகுதி மக்கள் டி.ஆர்.ஓ., முரளிதரனிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை 23ம் தேதி நடக்கும் என, தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் குடியிருப்பு பகுதி மக்கள் மட்டுமே வந்திருந்தனர்; கல்குவாரி தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
இதனால், குடியிருப்பு பகுதி மக்களிடம், அவர்கள் தரப்பு கருத்துக்களை கேட்ட ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன், கல்குவாரி நிர்வாகம், பொதுமக்கள், மின்வாரியம் என மூன்று தரப்பினரும் பங்கேற்கும் விசாரணை கூட்டம் பிப்., 26ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார். அன்று நடந்த கூட்டத்தில், இருதரப்பு விளக்கங்களை கேட்ட அவர், பேச்சுவார்த்தையை மார்ச் 5க்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில், "குவாரியை காரணம் காட்டி, மின் இணைப்பு தர மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, குவாரி உரிமத்தை ரத்து செய்து விட்டாவது, மின் இணைப்பு வழங்க வேண்டும்' என்று பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனைவரின் கருத்துக்களையும் பதிவு செய்த அதிகாரிகள், "கல்குவாரிக்கு அருகே உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கலாம்; அதற்கு, மின்வாரித்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
Top
* 23.மலை வாழ் மக்களுக்கு விரைவில் மாற்று இடம்

உடுமலை : "மலைவாழ் மக்களுக்கு ஒரு வாரத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்' என, அமைதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட குழிப்பட்டியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. சந்தன மரங்கள் நிறைந்த இப்பகுதியில், திடீரென மலைவாழ் மக்கள் மரம், செடிகளை வெட்டி குடியிருப்பு அமைத்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த அமைதி கூட்டம், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உடுமலை ஆர்.டி.ஓ., சோமசேகரன் தலைமை வகித்தார். தாசில்தார் கணபதி, உதவி வனப்பாதுகாவலர் தியாகராஜன், உடுமலை வனச்சரகர் சரவணன் மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.
"குடியிருப்புக்கு மட்டுமே அதிகபட்சம் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்படும்; கூடுதலாக வனத்தை அழித்து விவசாயம் செய்ய அனுமதிக்க முடியாது; சம்பந்தப்பட்ட இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்து, அரசு அனுமதி பெற்று குடியிருப்புக்கு இடம் ஒதுக்குவது' என, முடிவு செய்யப்பட்டது. இப்பணியை இரு தரப்பும் ஒரு வாரத்துக்குள் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Top
* 24.மரக்கன்று வழங்கும் விழா

திருப்பூர் : சுற்றுப்புறச்சூழல் வார விழாவையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருப்பூர் பிரண்ட் லைன் பள்ளியில் நடந்தது.
சுற்றுப்புறச்சூழல் வாரம், திருப்பூர் பிரண்ட் லைன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. துவக்க விழாவில், ரோட் டரி முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் பங்கேற் றார். பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வனவாழ் உயிரினங்கள் அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனவிலங்குகள் போல் குழந்தைகள் மாறுவேடம் அணிந்து, கலை நிகழ்ச்சி நடத்திக் காட்டின.
Top

பிரச்னைகள்

* 1.உழவர் சந்தை நேரத்தில் இடையூறு : விவசாயிகளுக்கு பாதிப்பு

திருப்பூர் : திருப்பூரில் உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் நேரத்தில், சந்தையின் வெளிப் பகுதியில் வியாபாரிகளின் காய்கறி விற்பனை நடக்கிறது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித் துள்ளனர். காய்கறி விலை வீழ்ச்சி அடையும் போது, விவசாயிகள் சோர்வடைகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தெற்கு உழவர் சந்தையின் வெளிப்புறப் பகுதியில், காலை நேரங்களில் அதிகமான கடைகள் செயல்படுவதால், உழவர் சந்தை விற்பனை பாதிப்படைகிறது. பொங்கலூர், பல்லடம், என சுற்றுப்பகுதிகளில் இருந்து உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறி கொண்டு வருகின்றனர். காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை விற்பனை சூடாக நடக்கிறது.
உழவர் சந்தை செயல்பட துவங்கும் அதிகாலை நேரத்திலேயே வியாபாரிகளும் காய்கறி விற்பனையை துவக்கி விடுகின்றனர். உழவர் சந்தை ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில், உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் விற்பனை நடக்கிறது. சந்தைக்கு நுகர்வோர் வரும் பாதையில் விற்பனை நடப்பதால், சந்தைக்குள் வரும் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.
விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது. பகலில் காய்கறிகளை பறித்து, அதிகாலை 2.00 மணி முதல் கிராமங்களில் இருந்து காய்கறி எடுத்து வருகின்றனர்; இரவு, பகல் பார்க்காமல் உழைக்கும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போது, வெளிப் புறங்களில் விற்பனை செய்வது வருத்தம் அளிக்கிறது. உழவர் சந்தை நேரத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு வியாபாரிகளின் விற்பனையை தடை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
Top
* 2.பொது இடங்களில் 'குடி'மகன்கள் தொல்லை : ரோடுகளில் மது குடிப்பதால் பெண்கள் அச்சம்

திருப்பூர் : "டாஸ்மாக்' மதுக்கடை பார்களில் கூட்டம் அதிகரித்தால், ரோடுகளில் அமர்ந்து மது குடிப்பதை "குடி'மகன் கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்; அவ்வழியாகச் சென்றுவர பெண்கள் அச்சப்படுகின்றனர்.
திருப்பூரில், சில மதுக்கடைகளுக்கு அருகில் விசாலமான பார்கள் செயல்படுகின்றன. சில பகுதிகளில் சிறிய அளவிலான பார்கள் உள்ளன. 15 முதல் 20 பேர் மட்டுமே அமர்ந்து மது குடிக்க முடியும். 10 பேர் வரை நின்று கொண்டு மது குடிக்கலாம். சனி மற்றும் ஞாயிறுக்கிழமை களிலும், விசேஷ தினங்களிலும் பார்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. நண்பர்களாக வரும் கூட்டம், மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொண்டே, போதை ஏற்றுவ தால், பாரில் மற்ற "குடி'மகன்களுக்கு உட்கார இடம் இருப்பதில்லை.
இத்தகைய நேரங்களில், மதுக் கடையை ஒட்டிக்காணப்படும் கடைகளின் முன்பகுதிகள் மற்றும் வீதியோரங்கள், ரோடுகளில் மது பாட்டில்கள், நொறுக்கு தீனி வகைளுடன் வட்டமாக அமர்ந்து மது குடிப்பதை "குடி'மகன்கள் பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். சனிக்கிழமை இரவிலும், ஞாயிறுக் கிழமைகளில் பகலிலும் ரோடுகளை ஆக்கிரமித்து பலரும் மது குடிக்கின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, எஸ்.வி., காலனி, தாராபுரம் ரோடு, கருவம்பாளையம், செல்லம் நகர், குமார் நகர், பாளையக்காடு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள "டாஸ் மாக்' பார்களின் முன், ரோடுகளில் மது குடிப்பது அதிகரித்து வருகிறது.
போதை தலைக்கேறிய சிலர், தகாத வார்த்தைகளை சத்தமாக பேசி கூச்சலிடுவதும், ரோட்டில் வந்து செல்பவர்களிடம் வம்பு செய்வதும் தொடர்கிறது."குடி'மகன்கள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகள் வழியாக பெண்கள் சென்று வரவே அச்சப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. பனியன் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில், வேலைக்குச் சென்று வரும் பெண் தொழிலாளர்கள் "குடி'மகன்களின் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
மது குடித்துவிட்டு காலி பாட்டில் களை ரோட்டிலேயே உடைத்து வீசுவது; அதிக போதையால் ரோட்டிலேயே அலங்கோலமாக விழுந்து கிடப்பதும் தொடர்கிறது. இதுபற்றி, அப்பகுதி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள், போலீசாரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
"பார்'களில் சுகாதாரமில்லை: "டாஸ்மாக்' மதுக்கடைகளில் நடத் தப்படும் "பார்'கள் சுகாதாரமின்றி செயல்படுகின்றன. உணவு பொருட் கள் சமைக்கப்படும் பகுதிகள் அசுத்தமாக காட்சியளிக்கின்றன. சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், உணவு வகைகளை வைத்திருக்கும் பாத்திரங்கள் அழுக்கடைந்து அருவருக்கத்தக்க நிலையில் உள்ளன. பல பார்களில் கை கழுவும் வசதி இல்லை. இதனால், பலரும் மது அருந்திய பகுதிகளிலேயே கைகளை கழுவுகின்றனர். போதை தலைக்கேறி, சிலர் வாந்தி எடுத்து, பாருக்குள் அசிங்கப்படுத்துகின்றனர். பார்களில் கழிப்பிட வசதி இல்லாததால், பாருக்கு ஒட்டிய பகுதிகளை, சுவரோரங்களை சிறுநீர் கழிப் பிடமாக பயன்படுத்தி அசுத்தப் படுத்துகின்றனர்.
Top
* 3.அமராவதி அணை நீர்மட்டம் சரிவு : நெற்பயிர் சாகுபடிக்கு திடீர் சிக்கல்

உடுமலை : அமராவதி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.
உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. கல்லாபுரம் ராஜவாய்க்கால் பாசனத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. கல்லாபுரம் பகுதிக்கு அமராவதி அணையிலிருந்து 10 மாதங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மற்ற பயிர்கள் சாகுபடியை விட நெற் பயிர் சாகுபடி செய்ய அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் குறுவை, சம்பா என ஆண்டிற்கு இரண்டு பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற வகையில் நெல் ரகங்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், நெல் பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பல ஆண்டுகளாக ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற் பயிர்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஒப்பந்த அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது.
நெல் நடவு செய்த மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு பிறகு அறுவடை நடைபெறும். ஆண்டுதோறும் அறுவடை செய்யப்படும் நெல் வியாபாரிகள் மூலமாக தாராபுரம், கரூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவ., மாதம் போதிய அளவு தண்ணீர் இருந்ததால், நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், போதிய தண்ணீர் கிடைக் குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது, 130 நாட்கள் பயிரான நெல் பால் பிடிக்கும் தருணத்தில் உள் ளது. நெற் பயிர்களுக்கு 20 நாட்களுக்கு மேல் தண்ணீர் வேண்டும். ஆனால், தற்போதுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் குறைந்ததால், போதிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காவிட் டால், கருகும் அபாயம் உள்ளது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்த நெற் பயிர்கள் அறுவடை தருணத்தில் போதிய தண்ணீர் கிடைக்காவிட்டால், மகசூல் பாதித்து நஷ்டம் ஏற்படும் இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
Top
* 4.தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் மாணவர்கள்

திருப்பூர் : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்து, மையங்களில் இருந்து வெளிவரும் மாணவர்கள் புத்தகம், கேள்வித்தாள் உள்ளிட்ட காகிதங்களை கிழித்தெரியும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். ரோட்டில் குப்பை ஏற்படுவதோடு, பொதுமக்களின் அதிருப்திக்கும் ஆளாகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த முதல் தேதி துவங்கி, நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 2 மதிப்பெண்கள் முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து மாணவர்களும் ஆண்டு முழுவதும், போராடி படிக்கின்றனர். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பும், மாணவர்களிடம் அதிக அளவில் திணிக்கப்படுக்கிறது.
இதனால், விளையாட்டு, "டிவி' என தனக்கு விருப்பப்படும் செயல்களில் ஈடுபடுவதை குறைத்துக்கொண்டு ஓராண்டு முழுவதும் படிப்பில் கவனத்தை செலுத்துக்கின்றனர். ஆர்வமாக படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற எதிர்பார்ப்புகள் உந்துதலாக இருந்தாலும், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு, படிப்பில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்களுக்கும், இது மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது.
தேர்வுகள் நெருங்கி வருகையில், காலை, மாலை என அதிக நேரம் படிப்பிற்கு ஒதுக்குவதோடு, பயமும் அதிகரிக்கிறது. ஒரு வித பயத்துடன் தேர்வை எழுதி முடித்து வெளியே வரும்போது, மகிழ்ச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து பாடப் புத்தகங்கள், நோட்டு, கேள்வித்தாள் ஆகியவற்றை கிழித்து ரோட்டில் தூக்கி எறிகின்றனர்.
இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயலை பார்க்கும் பொதுமக்கள், மாணவர்கள் மீது அதிருப்தி அடைகின்றனர். படித்த புத்தகங்களை பத்திரமாக சேமித்து வைத்தால், உயர்கல்வியின்போது, சிறு சந்தேகங்களுக்கு உதவிகரமாக இருக்கும். குறைந்தபட்சம் அடுத்து வரும் இளம் மாணவர்களுக்கு அந்தப் புத்தகங்களை இலவசமாக வழங்கலாம். ஒரு புத்தகத்தைத் தயாரிக்க எத்தனை மரங்களை அழிக்க வேண்டி உள்ளது, என்பதை மாணவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
தேர்வு முடிந்து விட்டதற்காக புத்தகங்களைக் கிழித்து வீதியில் வீசி, குப்பை ஏற்படுத்துகின்றனர். புத்தகத்தைக் கிழிப்பது, கற்ற கல்வியின் மதிப்பைக் கிழிப்பதற்கு சமம். இயற்கை விரோதச் செயலும் கூட. இதுகுறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
Top

சம்பவம்

* 1.இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

பல்லடம் :பல்லடம் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிருக்கு போராடி வருகிறார். மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் காயம் அடைந்தார்.
பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள டையிங் கம்பெனியில் வேலை பார்ப்பவர் நந்தகோபால் (30); நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜெயந்தியை(27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் உள்ள மண்ணெண்ணெயை ஜெயந்தி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு போராடி வருகிறார். காப்பாற்றச் சென்ற நந்தகோபாலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஜெயந்தி தீவைத்துக்கொண்டதற்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Top
* 2.டையிங் கம்பெனியில் தீ விபத்து : சாயமிட இருந்த துணிகள் சேதம்

பல்லடம் : பல்லடம் அருகே தனியார் டையிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின.
கரைப்புதூர் ஊராட் சிக்கு உட்பட்ட குன்னாங் கல்பாளையத்தில் டையிங் கம்பெனி நடத்தி வருபவர் லோகநாதன். இவரது கம்பெனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை பார்க்கின்றனர். நேற்று அதிகாலை 5.20 மணிக்கு சாயமிட இருப்பு வைக்கப்பட்டிருந்த துணிகள் அறை தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த ஊழியர்கள், கம்பெனியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சென்றன.
நிலைய அலுவலர்கள் ஆறுமுகம் பூமாலை, மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். அருகில் உள்ள இயந்திரங்களில் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், டையிங் கம் பெனிக்கு சாயம்போட வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், தீயில் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Top
* 3.மின் கம்பி உரசியதால் தீ விபத்து : கடை, வீடுகள் எரிந்து சாம்பல்

மடத்துக்குளம் : உடுமலை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடை மற்றும் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலாயின.
கணியூர் அருகே உள்ள அரியநாச்சிபாளையம் புதூர் மடம் பஸ் ஸ்டாப் அருகே கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கடையில், நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. யாரும் கவனிக்காததால், அருகில் இருந்து பல கடைகளுக்கு தீ பரவியது. நள்ளிரவில் தீ பரவியதால், தீயின் வெப்பம் அருகில் இருந்த வீடுகளையும் தாக்கியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து, தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் பல கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ பரவியது. உடனடியாக, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரவு 1.00 மணி முதல் 3.30 மணி வரை எரிந்த தீயில், கணியூர் - காரத்தொழுவு ரோடு மற்றும் கடத்தூர் ரோட்டிலுள்ள பல கடைகள் பாதிக்கப்பட்டன. சுப்ரமணி, அய்யாசாமி, பொன்னுசாமி ஆகியோரது வீடுகளும், ஒரு டீக்கடையும் முழுமையாக எரிந்து சாம்பலாயின; பல கடைகள் பாதி எரிந்த நிலையில் தப்பித்தன.
கணியூரில் உள்ள மெயின் ரோட்டின் இருபுறமும் மின்கம்பங்கள் உள்ளன. கடை மற்றும் குடியிருப்புகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் பழுதடைந்தும், அறுந்தும், மின்வாரியத்தால் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. மோசமான நிலையில் இருந்த மின் கம்பிகள் உரசி, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Top
* 4.ஓட்டல்களில் போலீசார் 'ரெய்டு' : 111 மது பாட்டில்கள் சிக்கின

திருப்பூர் : திருப்பூரில் உள்ள சில ஓட்டல்களில் நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
திருப்பூரில், நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில், ரிங் ரோடுகளில் "குடில்' ரெஸ்டாரண்டுகள் செயல்படுகின்றன. இவற்றில், மதுவகைகளும் விற்கப்படுகின்றன. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, திருப்பூரில் உள்ள சில ரெஸ்டாரண்டுகளில் போலீசார் சோதனை நடத்தினர். தாராபுரம் ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டில் "குவாட்டர்' மது பாட்டில்கள் 38, 90 மி.லி., மது பாட்டில்கள் 2, "ஆப்' மது பாட்டில்கள் இரண்டு கைப்பற்றப்பட்டன. அனுமதியின்றி மதுவிற்ற ரெஸ்டாரண்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் (40), செந்தில்குமாரை (31) தெற்கு போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம் போலீசார், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் நடத்திய சோதனையில், அப்பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில் நான்கு பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்; மது விற்ற எம்.எஸ்., நகரைச் சேர்ந்த முருகனை (40) கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு ரெஸ்டாரண்டில் நடத்திய சோதனையில், ஐந்து பீர் பாட்டில்கள் சிக்கின. 15 வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரைச் சேர்ந்த சபாபதியை (40) கைது செய்தனர்.
திருப்பூர் தெற்கு போலீசார், செல்லம் நகர் பகுதியில் நடத்திய சோதனையில், செல்லம் நகர் நால்ரோட்டில் மதுக்கடைக்கு அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், 52 "குவார்ட்டர்' பாட்டல்கள், 8 பீர் பாட்டில்கள் சிக்கின; மதுவிற்ற, சுரேஷை (24) போலீசார் கைது செய்தனர்.
Top
* 5.செங்கல் தயாரிக்க மண் கடத்தல்

உடுமலை : செங்கல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக, உடுமலை அருகே குளத்தில் இருந்து மண் கடத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள மருள்பட்டியில், 104 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. உரல்பட்டி, மலையாண்டிகவுண்டனூர், பள்ளிவலசு, சாளரப்பட்டி, சாமராயபட்டி, கருப்பட்டிபாளையம் உட்பட 800 ஏக்கர் சுற்றளவு கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான கிணறுகளுக்கு பயனளித்து வருகிறது.
ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் இக்குளத்தில், கோடை காலம் காரணமாக தற்போது தண்ணீர் தேங்கும் பரப்பளவு குறைந்துள்ளது. இக்குளத்தின் மண், செம்மண்ணாகவும், வண்டல் கலந்து காணப்படுவதாலும், செங்கல் உற்பத்திக்கு தரமான மண்ணாக பயன்படும். உடுமலை பகுதிகளில் உள்ள குளங்களில் மண் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல், இக்குளத்தின் மண்ணையும் சுரண்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், ஜெ.சி.பி., இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு, டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டது. செங்கல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ஒரு லோடு மண் 2,000 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. தினமும் பல லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவது குறித்து இப்பகுதி விவசாயிகள் கேட்டபோது, வருவாய்த்துறையினரிடம் மண் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது' என கூறி பல இடங்களில் மண் அள்ளப்பட்டதால், குளத்தில் பல இடங்களில் 30 அடி ஆழம் வரை குழி ஏற்பட்டுள்ளது.
மேலும், குளத்தின் கரைகளாக இருந்த மண் அள்ளப்பட்டதோடு, குளத்தில் இயற்கையான நில அமைப்பையே மாற்றும் வகையில், தரமான மண் இருக்கும் இடத்தில் மட்டும் மண் அள்ளப்பட்டதால், மிகப்பெரிய குழிகஏற்பட்டுள்ளது. குளத்தின் நீர் வழித்தடத்திலேயே மண் எடுக்கப்பட்டது. இதனால், குளத்தின் நீர் வழித்தடங்கள் மாறும் நிலை ஏற்பட்டதோடு, குளத்தின் பாதியளவு பரப்பளவு தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு மாறியது. மேலும், குளத்தின் நிலப்பகுதி பாறை மற்றும் சுண்ணாம்பு பாறை நிறைந்த பகுதியாக உள்ளதால், தொடர்ந்து மண் அள்ளப்பட்டால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்காமல் வீணாகும் அபாயமும் உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
இரண்டு நாள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்யாமல், மண் எடுக்க கூடாது என கூறிவிட்டு சென்றனர். ஆனால், தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது. இது வரை , பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆயிரம் லோடு மண் கடத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Top
* 6.ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பாரத அன்னையர் பேரவை சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். பொது செயலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் ராஜா, செயலாளர்கள் கதிரவன், ரஞ்சித், மூர்த்தி உள்பட நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
Top
* 7.மனிதநேய கட்சியினர் பல்லடத்தில் மறியல்

பல்லடம் : பூரண மதுவிலக்கு கோரி, மனிதநேய மக்கள் கட்சியினர் பல்லடத்தில் "டாஸ்மாக்' மதுக்கடை முன் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூரண மது விலக்கு கோரி, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடை முன் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஹாலுதீன், நகர செயலாளர் அன்சாரி உட்பட 90 பேரை, பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

* 1.ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ரூ.2.5 லட்சத்தில் திருப்பணி

கும்பகோணம்: ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில் தரை தளம் அமைக்கும் பணியை 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வாரவழிபாட்டுக்குழுவினர் தீவிரமாக செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பவளக்கொடி உடனாய ஆபத்சகாயேஸ்வரர் கோவி ல் உள்ளது. சுக்கிரீவனால் பூஜை செய்யப்பட்டதும், திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்த சொர்ண பை ரவர் உள்ளது. நாரதரால் சாபம் பெற்ற அனுமன் சாபம் நீங்கி இசை இன்பம் பெற்ற தலம்.


சித்திரை ஐந்து, ஆறு, ஏழாம் தேதிகளில் சூரியபூஜை நடக்கிறது. கர்ப்பிணி ஒருவருக்கு இறைவன் அப்பெண்ணின் தாயாராக மாறி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. வழிபடுவோரின் ஆபத்தை நீக்குவதால் ஆபத்சகாயேஸ்வரர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிறப்புகள் பலபெற்ற இத்தலத்தில் வெளிப்பிரகாரம் கவனிப்பாரின்றி புல், பூண்டுகள் மண்டி கிடந்த நிலையில் வாரவழிபாட்டு மன்றத்தினர் பிரகார தரை தளம் அமைக்க முடிவு செய்தனர். அதன்பேரில் வாரவழிபாட்டு மன்ற கவுரவத்தலைவர் மோகன், தலைவர் மாசிலாம ணி, செயலாளர் அன்பாலயா மே �கன், உறுப்பினர்கள் ராஜேந்திரன், முருகவேலு, சண்முகம் ஆ கியோர் ஆடுதுறை பகுதி மக்களுடன் இணைந்து 2.5 லட்சம் ரூ பாய் மதிப்பில் இப்பணியை தெ �டங்கி செய்து வருகின்றனர். 16 ஆயிரம் சதுரஅடியில் சிமெண்ட் தரைதளம் அமைக்கப்படுகிறது.


இத்தலத்தில் கந்தபுராண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மோகன் வரவேற்றார். பக்திப்பாடல்களை ராஜகோபால் பாடினார். முன்னதாக செல்வராஜன் துவக்க உரை நிகழ்த்தினார். ஞானசம்மந்தம் கந்தபுராணத்தில் தேவர் புலம்பனுபடலம், அயிராணி சோகப்படலம், மகாசாத்தப்படலம் என சொற்பொழிவு நிகழ்த்தினார். மோகன் மகிழ்வுரை நிகழ்த்தினார். பின், சந்தானம் தலைமையில் கூட்டுவழிபாடும், சிறப்பு அன்னதானமும் நடந்தது.
Top
* 2.திருவையாறில் வரும் 14ம்தேதிஇளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல்

திருவையாறு:திருவையாறில் இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வரும் 14ம்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.திருவையாறு வசந்த மகால் திருமண மண்டபத்தில் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கிராம கமிட்டியும், பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி கமிட்டியும் அமைப்பதற் கான தேர்தல் வரும் 14ம் தேதி தொடங்கி 18ம்தேதி வரை நடக்கிறது. தேர்தல் அலுவலகராக ஜெகதீஷ், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக


கிருஷ்ணாமோகன்ரெட்டி, தேவக்குமார், பாலமுருகன் ஆகியோர் செயல்படுகின்றனர். வேட்பாளர்களுக்கு சின்னங்கள் வழங் கப்பட்டுள்ளன. தேர்தல் 14ம்தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 வரை நடைபெறும். ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் வேட்பாளர் வாங்கியுள்ள ஓட்டுகள் விவரம் தெரிவிக்கப்படும். கிராம கமிட்டிக்கு 5 பேரும், பேரூராட்சி கமிட்டிக்கு 10 பேரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் நடக்கும் 5 நாட் களில் கிராமக் கமிட்டிக்கு 120 ஊராட்சிகள், 3 பேரூராட்சிகளிலும் உள்ளவர் கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஏற்பாடுகளை இளைஞர் காங்., மாநில பொதுச் செயாலாளர் மாத்தூர் ராம்மோகன், வட்டாரத் தலைவர் ராமகிருஷ்ணன், நகர தலைவர் சாமிநாதன், முன்னாள் தலைவர் ஆறுமுக கொன்னமுண்டார், மாவட்ட சேவாதள தலைவர் கருப்பையன், சந்தானகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் தருமராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Top
* 3.வரும் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும் :அதிமுக கூட்டத்தில் ஆவேசம்


கும்பகோணம்:வரும் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும் என்று நடிகர் ஆனந்தராஜ் பேசினார்.நாச்சியார்கோவில் வடக்குவீதியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியன் தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் பாரதிமோகன், இளமதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் பலர் பேசினர்.


நடிகர் ஆனந்தராஜ் பேசியதாவது:இல்லற வாழ்க்கையை துறந்து துறவறம் மேற்கொள்ளும் சாமியார்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க.,தான் ஆட்சி அமைக்கும். டி.வி கொடுப்பதையும், ஒரு ரூபாய் அரிசியையும் சொல்லி தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று கனவு காண்கிறது.ஆனால் டீசல், பெட்ரோல் விலை உயர்வுக்கும், அனைத்து பொருட்களும் விஷம்போல் உயர்ந்து வருவதற்கும் தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு இலவச கலர் டி.வியை கொடுத்துள்ளது. ஆனால் மாதம்


தோறும் கேபிள் டிவிக்கு ஒரு வீட்டிற்கு ரூ.100 வீதம் 6 ஆயிரம் கோடி ரூபாய் மாறன் குடும்பத்திற்கு செல்கிறது.தமிழர்களையும், தமிழ் மொழியையும் பற்றி கருணாநிதிக்கு உண்மையிலேயே கவலை இல்லை. அவருடைய கவலையெல்லாம் கனிமொழியை பற்றித்தான். அப்துல்கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வராமல் தடுத்தவர் கருணாநிதி தான். அவர் தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்திருந்தால் இலங்கையில் ஒரு தமிழன் கூட இறந்திருக்க மாட்டான். அ.தி.மு.க.,வை அழித்துவிட வேண்டுமென கருணாநிதி திட்டம் போடுகிறார். அ.தி.மு.க.,வை யாராலும் அசைக்க முடியாது. வரும் 2011ம் ஆண்டு அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்கும். மக்களுடன் முதலில் கூட்டணி அமைத்தவர் ஜெயலலிதா தான். எனவே வரும் தேர்தலில் தி.மு.க., டெபாசிட் இழக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
Top

பொது

* 1.மனிதநேய சிந்தனை மாணவர்களுக்கு தேவை: மாஜி துணைவேந்தர் பேச்சு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் குழும கல்வி நிறுவனங்களின் நிறுவன நாள் விழா நடந்தது.இணை வேந்தர் நாகராஜன் வரவேற்றார். துணை வேந்தர் ஜெயச்சந்திரன் அறிமுக உரையாற்றினார். கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள் தங்கவேல், நித்யானந்தம், சங்கர்ஜி, லட்சுமணன் ஆகியோர் ஆண்டறிக்கை படித்தனர்.பரிசுகளை வழங்கி திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ஜெயராமரெட்டி பேசியதாவது: நல்ல கல்வியாளர்கள், மாணவர்களால் இந்நிறுவனம் நிகர்நிலைப் பல்கலை.,யாக உயர்ந்துள்ளது. அனைத்து வசதிகளும் இங்கு ஒரே இடத்தில் கிடைப்பதால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது.


இந்தியா அனைத்து துறையிலும் அறிவுசார்ந்த நாடு. விவசாயம், தொழில் நுட்பம், உற்பத்திகள், சேவை போன்ற பலவற்றில் தன்னிறைவு பெற்று வருகிறது. இச்சமுதாயத்தை மேலும் சீரமைக்கும் பொறுப்பு மாணவர்களிடம்தான் உள்ளது. 2020ம் ஆண்டில் இந்தியாவில் கிராமங்கள், நகரங்களுக்கு இடையேயான வித்தியாசம் மிகச்சிறிய கோடுகள் போன்றதாகும். நகரில் கிடைக்கும் அனைத்து திறனமைப்புகள், தரம், தொழில் நுட்பங்கள் கிராமங்களிலும் கிடைக்கும். கல்வியறிவற்றவர்கள் இல்லாத நிலை ஏற்படும். விவசாயம், உற்பத்தி, தொழிற்சாலைகள், தொழில் நுட்பங்கள், சுகாதாரம் போன்றவைகளில் சீரான முன்னேற்றம் ஏற்படுவதால், நாம் உயர்ந்த வளர்ச்சியை பெற்று வருகிறோம்.


உலகில் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதில் இந்தியா இரண்டாவது இடத்திலும், உயர் தொழில் நுட்பத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ளோம். அறிவுசார் தொழில் நுட்பம், கல்வி, பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இணையாக உள்ளோம். உள்கட்டமைப்பு, மருத்துவம், வெளிநாடுகளுடனான தொடர்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவைகளிலும் நாம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துள்ளோம். உயர்கல்வியில் குறிப்பாக தொழில் நுட்பக்கல்வியில் மாணவர்கள் மிகச்சிறந்து விளங்க வேண்டும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.சி.எஸ்., என்.ஐ.டி., போன்றவைகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் போட்டியிட வேண்டும். வரும் காலங்கள் போட்டி நிறைந்தது. அதில், தங்களை தக்கவைத்துக் கொள்ள ஒழுக்கம், சிறந்த கல்வி, தொடர் பயிற்சி, மனிதநேயமுள்ள சிந்தனை, திட்டமிட்ட உழைப்பு போன்ற அவசியம் தேவை. இதில், சிறந்தவர்கள் வளமான இந்தியாவை உருவாக்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார். பதிவாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Top
* 2.தஞ்சையில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளன மாநாடு துவக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் மூன்றாவது மாநில மாநாடு நேற்று துவங்கியது. மாநிலத்தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். தஞ்சை மா வட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணிய சர்மா தேசியக்கொடியேற்றினார். முன்னாள் மாநில செயலாளர் மாலி சம்மேளன கொடியேற்றினார். மாநில அமைப்பு செயலாளர் லட்சம் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். வரவேற்புக்குழு செயலாளர் பிரின்ஸ் வரவேற்றார்.


ஏ.ஐ.டி.யு.சி., மூத்த தலைவர் ஏ.எம்.கோபு பேசியதாவது:தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் வலியுறுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் நடக்கும் போது நாம் ஒன்றுபட்டிருக்க வேண்டும். தற்போது பி.எஸ்.என்.எல்., நிறுவனம் இந்தளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதற்கு யார் காரணம் என சிந்திக்க வேண்டும். மக்களின் வரிப்பணம், மக்கள் சேமித்த நிதியாதாரங்களால் பி.எஸ்.என்.எல்., ஆஸ்தி உருவானது. இந்த ஆஸ்தியின் மூலம் பெரிய கட்டுமானங்கள் உருவானது. ஆனால், இன்று இதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிக்கும் மடங்களாக இது மாறிவிட்டது. இதனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நலிவடைந்துபோயுள்ளது.


நாங்கள் யாரையும் பொதுவாக குற்றம் சாட்டவில்லை. இந்நிறுவனம் துவங்கிய நோக்கம், லட்சியம் நிறைவேறாமல் மக்களும், தொழிலாளர்களும் இன்று பெரிதும் பாதிக்கப்படும் நிலை, ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு லட்சம் தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்ற நிலையை நாம் எதிர்நோக்கி உள்ளோம். பார்லிமென்ட்டில் முன்பு இடதுசாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை மத்திய அரசுக்கு இருந்தது. அந்நிலை மாறி இடதுசாரிகளின் தேவை நமக்கு இல்லை என்ற மத்திய அரசு எண்ணுகிறது. தட்டிக்கேட்க ஆட்கள் இன்றி பி.எஸ்.என்.எல்., போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அரசால் பாதிப்புக்கு உள்ளாகிறது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பொருளாதார சீரழிவு, பெரும் சருக்கல் இந்தியாவில் இடதுசாரிகள், தேசபக்தி கொண்டவர்கள் பிடிவாதத்தால் ஏற்படவில்லை. நவீன இந்தியாவில் இடதுசாரிகள், தேசபக்தி கொண்டவர்கள், தொழிலாளர்கள் ஒன்று கூடி இருக்க வேண்டும். அந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை மக்களும், தொழிலாளர்களும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.ஒன்பதாம் தேதி வரை நடக்கும் மாநாட்டில் இன்று (8ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர்கள் ஓ.பி.குப்தா, என்.டி.சஜ்வானி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
Top
* 3.நகராட்சி பள்ளியில் கல்விக்குழு கூட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வார்டு கல்விக்குழு கூட்டம் நடந்தது.நகராட்சித் தலைவரும் பள்ளி வார்டு கல்விக் குழுத் தலைவருமான தேன்மொழி தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை பௌலின், ஆசிரியர் பயிற்றுனர் வெங்கட்ராஜ் ஆகியோர் பள்ளி முன் னேற்றம், அனைவருக் கும் கல்வி இயக்க செயல் பாடு குறித்து விளக்கினர். குழு உறுப்பினர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Top
* 4.கணவரின் 2வது திருமண முயற்சியைதடுத்து நிறுத்தக்கோரி எஸ்.பி.,யிடம் மனு

தஞ்சாவூர்: கணவருக்கு 2வது திருமணம் நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெண் குழந்தையுடன் வந்த பெண் தஞ்சை எஸ்.பி., செந்தில்வேலனிடம் மனு கொடுத்தார்.ஒரத்தநாடு வடக்கூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் மங்கையர்க்கரசி (32). இவர் தஞ்சை எஸ்.பி., அலுவலகத்திற்கு தனது பெண் குழந்தை கிருஷ்ணவேணியுடன் வந்து, எஸ்.பி., செந்தில்வேலனை சந்தித்து மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது:எனக்கும் புதுக்கோட்டை அருகே முதலிப்பட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சீர்வரிசைகள் தரப்பட்டது.


எங்களுக்கு பிறந்த பெண் குழந்தை தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறது. தற்போது அவர் வெளி நாடு செல்ல வேண்டும் என்பதற்காக எனது தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி வற்புறுத்தி வந்தார். பணம் கேட்டு கொடுமை செய்ததால் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தேன். இந்நிலையில் எனது கணவர் அய்யப்பனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
Top
* 5.செ.புதூர் ஆயர்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம்: செ.புதூர் ஆயர்துறை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள செ. புதூர் கடைவீதியில் ஆயர்துறை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் கடந்த 25 ஆண்டுகளுக்கு பின் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் திருப்பணி வேலைகள் முடிந்து கடந்த இரண்டாம் தேதி விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. காலை ஏழு மணிக்கு நான்காம் கால யாகபூஜைகள் நடந்தது.


தொடர்ந்து 10 மணிக்கு கடங்கள் புறப்பட்டு விமான கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், அன்னை கருணை இல்லம் அம்பலவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.திருநீலக்குடி எஸ்.ஐ. மீனா மற்றும் போலீஸார், செ.புதூர் உயர்நிலைப்பள்ளி ஜெ.ஆர்.சி. மற்றும் சாரண மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிவாச்சாரியார்கள் பிச்சுமணி, சுப்ரமணியன், நாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆகம பாராயணம் நடந்தது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை செ.புதூர் கிராமவாசிகள், மார்கழி மாத தனூர்பூஜை உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Top
* 6.பள்ளிவாசலில் மிலாது நபி விழா

கும்பகோணம்:தஞ்சை மாவட்ட சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பில் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில் மிலாதுநபி விழா நடந்தது.மாவட்ட பேரவை தலைவர் ஷம்சுத்தீன் பைஜி தலைமை வகித்தார். பள்ளிவாசல் இமாம் முகமதுபைஜி பாகவி கிராத் ஓதினார். சையது முஸ்தபாபைஜி உத்தம நபியின் உதயதினம் பற்றிபுகழ் கீதம் பாடினார்.பேரவை மாநிலத் துணைச் செயலாளர் அப்துல்காதிர் வரவேற்றார். பள்ளிவாசல் தலைவர் முகமதுஜியாவுதீன், செயலாளர் அல்லாபக்ஷ், மாவட்ட முஸ்லிம் கல்வி சங்கத் தலைவர் ஜிர்ஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவை மாநில பொது செயலாளர் மேலை நாசர், குடந்தை வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ஜபர் சாதிக் நூரி ஹழரத், திருவிடைமருதூர் வட்டார தலைவர் முகமது முஸ்தபா தாவூதி ஹழரத், ஜாமியா இலாகியா அரபிக் கல்லூரி நிறுவனர் நூரானி ஷாஹ்பைஜி ஹழரத் ஆகியோர் பேசினர்.அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் ஜகாங்கீர், நகர பொருளாளர் அப்துல்சமது மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரவை மாவட்ட செயலாளர் நஜ்முதீன் நன்றி கூறினார்.
Top
* 7.4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வணிகவரி பணியாளர் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர்:வணிக வரித்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.தமிழக அரசின் வருவாயில் 70 சதவீதத்தை வசூ லித்து தரும் வணிகவரித்துறையில் காலியாக உள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.


வணிக வரித்துறைக்கு அரசு தேர்வாணையம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை பெற வணிகவரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட வணிகவரித்துறையில் கூடுலாக பதிவேடுகளிலும் பதிவுகள் மேற்கொள்வதை கைவிட வேண்டும்.2010ம் ஆண்டிற்கான உதவி வணிகவரி அலுவலர், வணிகவரி அலுவலர்,உதவி ஆணையர் ஆகிய பதவி உயர்வு பட்டியல்களை உரிய காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 25ம்தேதி மாவட்ட தலை நகரங்களில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஏப்ரல் 10ம்தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநில முன்னாள் செயலாளர் துரைசிங், மாநில பொதுச் செயலாளர் அரங்கநாதன், பொருளாளர் ஜனார்த்தனன், துணைத் தலைவர்கள் வெற்றிராஜன், மணிபாரதி, லட்சுமணன், துரைராஜ், செயலாளர்கள் முருகன், மதியழகன், செல்வக்குமார், ஜெயராஜராஜஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட தலைவர் திருஞானம் நன்றி கூறினார்.
Top
* 8.தஞ்சபுரீஸ்வரர் கோயிலில்மகா சிவராத்திரி பெருவிழா

தஞ்சாவூர்:தஞ்சை வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி 1008 கலசாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது.தஞ்சை வெண்ணாற்றங்கரையில் குபேரன் வழிபட்ட தலமான ஆனந்தவல்லி அம்மன் சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு சிவராத்திரி விழா வரும் 13ம்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் 11ம்தேதி காலை முதல் பூர்வாங்க பூஜைகள் நடக் கிறது. மறுநாள் மஹா யாகம் நடக்கிறது.13ம்தேதி காலை 8 மணி முதல் இரவு 7 வரை மஹா யாகம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனையும், பின்னர் கடம் புறப்பாடும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு முதல் கால மகா அபிஷேகம், தொடர்ந்து நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4 மணிக்கு முறையே 2, 3, 4ம்கால அபிஷேகங்கள் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் சிவாஜி, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபான்ஸ்லே, பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Top
* 9.அரசுப் பணிகளில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். முதல் அலுவலக உதவியாளர் வரையிலான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் தீர்மானம்

தஞ்சாவூர்:அரசுப் பணிகளில் காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். முதல் அலுவலக உதவியாளர் வரையிலான பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் கழக சி மற்றும் டி பிரிவு மாவட்டக் கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாவட்டத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் தரும கருணாநிதி வரவேற்றார். துணைத் தலைவர்கள் சண்முகய்யா, பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் மோகன், அமைப்பு செயலாளர் அருள்சாமி, சத்திரம் நிர்வாகப் பணியாளர் சங்க செயலாளர் சிவகாசி, மாவட்டத் தலைவர்கள் சுப்பையா, காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் துன்பப்படும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர மக்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.


அரசுப் பணிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் ஐ.ஏ.எஸ். வரையிலான பணியிடங்களை நிரப்ப வேண்டும்.6வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனுக்கு நீட்டிப்பு வழங்காமல் அறிக்கையை பெற்று அரசு அலுவலர்களுக்கு விடுபட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்.தொழில் வரியை ரத்து செய்தும் அரசு அலுவலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதையில் காலம் தாழ்த்தாமல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
Top
* 10.தஞ்சை அரசு ஜூவல்ஸ் டிரெண்டியில் திறப்பு விழா: சலுகை மேலும் நீட்டிப்பு

தஞ்சாவூர்:தஞ்சை நகரில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் அரசு ஜூவல்ஸ் டிரெண்டியில் திறப்புவிழா சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு குழும நிறுவனத்தின் புதுவரவான அரசு ஜூவல்ஸ் டிரெண்டி ஹால்மார்க் கோல்ட் அண்டு வைர நகை மாளிகையில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திறப்புவிழா சலுகை வரும் 10ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


திறப்புவிழா சலுகையாக அனைத்து ஹால் மார்க் 916 நகைகளுக்கும் செய்கூலி முற்றிலுமாக இல்லை. சேதாரம் 12 சதவீதம் மட்டும் கணக்கிடப்படும். எக்சேஞ்ச் முறையில் பழைய தங்க நகைகளை கொடுத்து அன்றைய மார்க்கெட் விலையில் மதிப்பிடப்பட்டு புதிய நகைகளை மாற்றிக் கொள்ளலாம்.வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் சர்வீஸ் சார்ஜ் கிடையாது.அரசு ஜூவல்ஸ் டிரெண்டி ஹால்மார்க் கோல்ட் மற்றும் டைமண்ட் �ஷாரூமில் எங்குமே கண்டிராத ஜூவல் ஒன் கலெக்ஷன்ஸ், ரூபி ஜிர்கான், கல்கத்தா மற்றும் புதிய, குறைந்த எடையில் விதவிதமான நகைகள் வாடிக்கையாளருக்காக வரவ ழைக்கப்பட்டு உள்ளது.எனவே வாடிக்கையா ளர்களும், புதிதாக நகைகள் வாங்குவோரும் திறப்பு விழா சலுகைகளை பயன்படுத்தி, நகைகள் வாங்கி மன நிறைவுபெறுமாறு அரசு குழும சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன்கள் செந்தில்குமார், முருகன் ஆகியோர் அழைப்பு விடுத்து உள்ளனர்.
Top
* 11.திருக்காட்டுப்பள்ளியில் எஸ்எஸ்ஏ ஒருங்கிணைப்பாளர் திடீர் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் ஆய்வு செய்தார்.ஆய்வில் பள்ளி செயல் வழிக்கற்றலில் மாணவர்களின் படிநிலையையும், அடைவுத்திறன் போன்றவற்றையும் கேட்டறிந்தார்.கம்ப்யூட்டர் வழிக்கல்வியில் பயிற்சியை மேற்கண்ட ஆசிரியர்கள், செயலாராய்ச்சி மூலம் கற்பித்தல், நிகழ்வுகளில் உத்திகைகளை கையாளுமாறும் அறிவுரை வழங்கினார்.பயிற்சியின் போது பயிற்றுனர் ஆசிரியர் நெப்போலியன், செய்தி தொடர்பாளர் டேவிட் ஆகியோர் உடனிருந்தனர்.
தலைமை ஆசிரியர் முருகானந்தம் வரவேற்றார்.




Top
* 12.பட்டுக்கோட்டை பாலிடெக்னிக்கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., முகாம் சாந்தாங்காடு கிராமத்திலும், பாளையம் குடிசைப் பகுதியிலும் ஒரு வாரம் நடந்தது. முகாம் தொடக்க விழாவிற்கு முதல்வர் முத்துவேலு தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மற்றும் பொது இடங்களை சுத்தம் செய் தனர். குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம் இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அவசர கால ஊர்தி 108 பயன்பாடு பற்றியும், முதலுதவி, இயற்கை இடர் பாடு, மேலாண்மை விழிப்புணர்வு, மனநலம் மற்றும் உடல் நலம் விழிப்புணர்வு பற்றி கருத் தரங்கம் நடத்தப்பட்டது. திட்ட அலுவலர் முகமது அலி வரவேற்றார். மாணவர் ராகுல்காந்தி நன்றி கூறினார்.




Top
* 13.அதிராம்பட்டினம் கல்லூரி பட்டமளிப்பு விழா

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லூரி செயலாளர் முகமதுஅஸ்லாம் தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் ராமசாமி 445 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசுகையில், நாகரீகம், கலாசாரம், பண்பாடு போன்றவை மேம்பட வேண்டும் என்றால் கல்வி அவசியம். பட்டமளிப்பு விழா மற்ற விழாவைப் போல் இல்லாமல் மனிதனை பொறுப்பு உள்ளவனாக மாற்றுகிற விழா. உயர்கல்விக்கு இன்றைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.விலங்கியல் துறை தலைவர் அமானுல்லா அமீது வரவேற்றார். கல்லூரி முதல்வர் முகமது அப்துல்காதர் பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசித்தார். குமாரசாமி நன்றி கூறினார். பேராசிரியர்கள் பர்கத், கணபதி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.




Top
* 14.சத்துணவு ஊழியர்கள் சங்கக் கிளை மாநாடு

திருவையாறு:திருவையாறு அருகே நடுக்காவிரியில் சத்துணவு ஊழியர் சங்க வெள்ளிவிழா ஆண்டின் 10வது கிளை மாநாடு நடந்தது.ஜார்ஜ்ஸ்டீபன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் பழனிச்சாமி, அருள்அந்தோணி, பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா ரவிவர்மா வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார் வீரமணி வேலை அறிக்கை வாசித்தார்.


வரவு - செலவு அறிக் கையை இணைச் செயலாளர் தமிழரசன் வாசித்தார். மாநில செயலாளர் சக்தி, மாவட்ட தலைவர் மனோகரன் தணிக்கையாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைச் செயலா ளர் ஜேம்ஸ், சாலைப் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ரவிச்சந்திரன்.அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் புஷ்பராஜ், தமிழக கிராம நிர்வாக அலுவலர் கள் சங்க மாவட்ட மைப் பாளர் தாமரைச்செல்வன், அரசு ஊழியர் சங்க வட்ட இணைச் செயலாளர் லாரன்ஸ் ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ஜார்ஜ் ஸ்டீபன், செயலாளராக வீரமணி, பொரு ளாளராக லலிதா, பன்னீர் செல்வம், அருள்அந்தோணிதாஸ், சாவித்திரி, ஆகியோர் இணைச் செயலாளராகவும், லீமாரோஸ், ராதாகிருஷ் ணன், தமிழரசன் ஆகியோர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Top
* 15.தடைபட்டுள்ள கோடீஸ்வரர் கோயில் திருத்தேரோட்டத்தை நடத்த கோரிக்கை

கும்பகோணம்:கும்பகோணம் கொட் டையூர் கோடீஸ்வர சுவாமி கோயிலில் தடைபட்டுள்ள திருத்தேரோட்டத்தை பங்குனி உத்திரப் பெருவிழாவை ஒட்டி இந்த ஆண்டு நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து ஜோதிமலை இறைபணி திருக் கூட்ட செயலாளர் தமிழரசன் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கொட்டையூர் கோடீஸ் வர சுவாமி கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக பங்குனி உத்திர பிரமோற்சவம் 10 நாட்கள் நடந்து உள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக இவ்விழா ஏகதின மகோற்சவமாக தீர்த்தவாரி மட்டுமே நடந்து வருகிறது. இதனால் திருத்தேரோட்டம் நடைபெறாமல் தேர் நின்ற நிலையிலேயே இருந்து வருகிறது.தற்போது நித்ய பூஜைகள் கூட சரிவர நடைபெறவில்லை. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் திருவிழா நின்று போனது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விழா நடத்த சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் பங்குனி உத்திர விழாவை வழக்கம் போல 10 நாட்கள் நடத்த வேண்டும். தேரோட்டத்தை அவசியம் நடத்த வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Top
* 16.தியாகம் டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் வெள்ளி விழா

திருவையாறு:திருவையாறு தியாகம் டெக்ஸ்டைல்ஸ் �ஷாரூம் வெள்ளிவிழா நடந்தது.பூண்டி அய்யாறு வாண்டையார் தலைமை வகித்தார். திருவையாறு ஆதீனக் கட்டளை விசாரணை முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் குத்துவிளக்கேற்றினார். மத்திய அமைச்சர் பழனிமாக்கம், அமைச் சர் உபயதுல்லா ஆகியோர் பரிசு வழங்கினர். திரு�யாறு தமிழிசை மன்ற தலைவர் ஆறுமுகம், தமிழிசை மன்ற அறங்காவலர்கள் பஞ்சநதம், கோவி.கணேசமூர்த்தி.மாத்தூர் மேற்கு ராஜசேகர், வணிகர் நலக்கழகத் தலைவர் சத்தியமூர்த்தி. வட்டார காங். தலைவர் ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் கே.கே.எஸ். வாடகை பாத்திர நிலையம் கிருஷ் ணசாமி, தஞ்சாவூர் நகர காங்., கமிட்டி கலிய பெருமாள் ஆகியோர் பேசினர்.திருவேங்கடம் நன்றி கூறினார்.




Top
* 17.ஆயுள் காப்பீடு திட்ட கூட்டம்

கபிஸ்தலம்: பாபநா சத்தில் அஞ்சல் துறை சார்பில், கிராமியஅஞ்சல் ஆயுள் காப்பீடுத் திட்ட கூட்டம் நடந்தது.அஞ்சலக உதவி கண் காணிப்பாளர் எழில் தலைமை வகித்தார். அஞ்சலக ஆய்வாளர் பிரேம்ஆனந்த வரவேற் றார். முதுநிலை கண்கா ணிப்பாளர் பரோஸ் மொகைதின் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி பேசினார். உதவி கண்காணிப்பா ளர்கள் கிருஷ்ணமுர்த்தி, அருள்தாஸ், அஞ்சலக ஆய்வாளர் கார்த்திகேயன் நேர்முக உதவியாளர் சவுரிராஜன், காமராஜ் பேசினர். கிருஷ்ண முர்த்தி நன்றி கூறினார்.




Top
* 18.தஞ்சை யாகப்பா பள்ளியில் பெற்றோர் தினவிழா

தஞ்சாவூர்:தஞ்சை யாகப்பா பள்ளியில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் தின விழா "எக்லா 2010' கொண்டாடப்பட்டது.டாக்டர் அருளய்யா சாமுவேல் தலைமை வகித்தார். மாணவி பிரித்தாதேவி வரவேற்றார். மாணவி லிண்டா அறிமுக உரை யாற்றினார். கல்வி மற்றும் இதர போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சாமுவேல் மற்றும் சுஜாதா சாமுவேல் பரிசு வழங்கினர்.டாட்லர்ஸ் யாகப்பா பள்ளி மாணவர் சக்திவேல் திருக்குறளும், ட்ரிபீனாஆலிவ் என்ற மாணவி உடல் எலும்புகளின் பெயர்களையும், சென்னிலவன் என்ற மாணவர் வேதியியல் குறியீடு விளக்கத்தையும், செர்வீன் ஸ்பியர்ஸ் என்ற மாணவர் பொது அறிவுத்திறன் பற்றியும் பேசி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.ரோஷன் நன்றி கூறினார்.குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி டிரஸ்டி மேரி ஞானம் தலைமையில்,தாளாளர் எட்வர்ட் ஆரோக்கியராஜ், மேற்பார்வையில் முதல்வர் கீத்திகா மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
Top
* 19.சி.யூ.பி.,யில் முப்பெரும் விழா :பட்டுக்கோட்டை: பட்டுக்கோ

வீஜிநவிலிஹீஙஜிஷீபுடூசு ஹீஙடுசுட்ஷீவூ சஙtஆஙஸ் கூஜிஷீபு ப்லூசி ஷீடுவித்சஙம்ட்டை சிட்டி யூனி யன் வங்கியில் முப்பெ ரும் விழாக்கள் நடந்தது.பட்டுக்கோட்டை சிட்டி யூனியன் வங்கி கிளையில் 36ம் ஆண்டு தொடக்க விழா, வாடிக் கையாளர் சந்திப்பு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா ஆகியவை நடந்தன. செயல் இயக்குனர் காமகோடி, வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு பொது மேலா ளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சாய்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர். உதவி மேலாளர் சுமேந்திரன் வரவேற்றார். வாடிக்கையாளர்களின் குறைகளை கேட்டறிந்து, சிறப்பான சேவை செய்வோம் என்று உறுதி கூறினர். சுயஉதவிக்குழுக்களுக்கு 5 லட்சம் கடன் வழங்கினார். கிளை மேலாளர் வெங்கட்ரமணி, வங்கி செயல்பாடுகள், சேவை பற்றி பேசினார். நிகழ்ச்சியை வங்கி உதவி மேலாளர் மார்ட் டின்அமிர்தராஜ் தொகுத்து வழங்கினார். காமராஜ் நன்றி கூறினார் .
Top
* 20.என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்

கும்பகோணம்:கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் திருநாகேஸ் வரம் நாகநாத சுவாமி கோயில், ஒப்பிலியப்பன் வேங்கடாஜலபதி பெருமாள் கோயில், தேப்பெருமாநல்லூர், அம்மாசத்திரம் ஆகிய இடங்களில் உழவாரப்பணி மேற் கொண்டனர்.தொடர்ந்து 7 நாட்கள் நடந்த முகாமில் சட்ட விழிப்புணர்வு, பெண்களுக்கான சிறப்பு சட்ட பிரிவுகள், யோகா பயிற்சிகள், தொழிற் பயிற்சிகள், சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றங்கள், ரத்ததான நிகழ்ச்சி நடந்தது. வரலாற்றுத்துறை தலைவர் சந்திரா தலைமை வகித்தார்.

திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி கல்விக்குழும தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர்.பேராசிரியர்கள் மேரிகிரோஸ், ராஜேஸ்வரி, சுமதி ஆகியோரது வழிகாட்டுதலுடன் சுமார் 150 மாணவிகள் என்.எஸ்.எஸ் முகாம் பணிகள் மேற்கொண்டனர். திட்ட ஒருங்கிணைப் பாளர் விஜயலட்சுமி, கால்பந்தாட்டக் கழக துணைத் தலைவர் மார்ட் டின் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Top
* 21.நகராட்சி பள்ளியில் கல்விக்குழு கூட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வார்டு கல்விக்குழு கூட்டம் நடந்தது.நகராட்சித் தலைவரும் பள்ளி வார்டு கல்விக் குழுத் தலைவருமான தேன்மொழி தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் முன்னி லை வகித்தார். தலைமை ஆசிரியை பௌலின், ஆசிரியர் பயிற்றுனர் வெங்கட்ராஜ் ஆகியோர் பள்ளி முன் னேற்றம், அனைவருக் கும் கல்வி இயக்க செயல் பாடு குறித்து விளக்கினர். குழு உறுப்பினர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Top

சம்பவம்

* 1.தஞ்சையில் 100 நாள் வேலைத்திட்ட ஊதிய குளறுபடியை நீக்கக்கோரி தர்ணா

தஞ்சாவூர்:100 நாள் வேலைத் திட்டதின் ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை போக்க கோரி இளம் கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம் சார்பில் தஞ்சையில் தர்ணா போராட்டம் நடந்தது.தேசிய தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். உறுப்பினர் விக்டோரியாமேரி வரவேற்றார். பொருளாளர் தமிழ்கவி, உறுப்பினர் தனஞ்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறைந்தபட்ச ஊதியம் 80ஐ நடைமுறைப் படுத்த வேண்டும். 8 மணி நேர வேலையை அமல் படுத்த வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்தல், உள்நாட்டு தொழில்களை மேன்மை படுத்துதல். 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா நடந்தது. கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. கட்சிமாவட்ட செயலாளர் மனோகரன், இளம் கிறிஸ்துவர் இயக்க முன்னாள் பொருளாளர் குமார், முன்னாள் செயலாளர் சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Top
* 2.மதுக்கடையை மூடக்கோரி முற்றுகை மனிதநேய மக்கள் கட்சியினர் கைது

தஞ்சாவூர்:தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மதுக்கடைகளையும் மூடக்கோரி தஞ்சையில் மதுக்கடையை முற்றுகையிட முயற்சி செய்த மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் இயங்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும். காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் இன்னும் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. மதுக்கடை வருமானம் இல்லாமல் குஜராத் மாநில அரசு 10 ஆண்டுகளாக முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. அதைப்போல தமிழகத் திலும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கலந்தர் தலைமையில் 30 பேர் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயற்சி செய்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு போலீசார் அவர்களை கைது செய்தனர்.
Top
* 3.பஸ் படியில் பயணம் செய்த வாலிபர் பலி: நால்வர் காயம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தனியார் பஸ் விபத்தில் படியில் பயணம் செய்த வாலிபர் இறந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழ்மாறன் (19). கூலி தொழிலாளி. இவர் காலை ஒன்பது மணிக்கு கும்பகோணம் வந்த எஸ்.எம்.டி., என்ற தனியார் பஸ்சில் ஏறி, கூட்டம் அதிகம் இருந்ததால் படியில் நின்றுகொண்டு வந்தார். மருதாநல்லூர் அருகே பஸ் வரும்போது எதிரில் வந்த வாகனத்துக்கு வழிவிட்ட பஸ் டிரைவர் வலதுபுறம் நின்ற ஏர் உழும் இயந்திரத்தில் பஸ்சை மோதிவிட்டார்.


இதில், படியில் பயணம் செய்த தமிழ்மாறன், புளியக்குடி கீழத்தெருவை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ராமசாமி (20), மேலவிசலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் மகன் மோகன் (24), திப்பிராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த இந்திரஜித் மகன் தீனதயாளன் (18), மேலவிசலூர் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (49) ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் ஐந்து பேரையும் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தமிழ்மாறன் இறந்தார். மற்றவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுபற்றி, நாச்சியார்கோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Top
* 4.குடிபோதையில் கூச்சல் சஸ்பெண்ட் ஏட்டு கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் குடிபோதையில் கூச்சலிட்ட, ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டு கைது செய்யப்பட்டார்.தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிவர் ஜான்கென்னடி (45). இவர் வல்லம் டி.எஸ்.பி., வசுந்தரா, போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தபோது, குடிபோதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இந்நிலையில், நேற்றுமுன்தினம் குடிபோதையில் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகம் வந்த ஏட்டு ஜான்கென்னடி, தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டு சத்தம்போட்டார். எஸ்.பி., செந்தில் வேலன் உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு ஜான்கென்னடியை கைது செய்தார். இச்சம்பவம் தஞ்சை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Top
* 5.நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் தடுமாறி விழுந்தவர் பலி

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே டூவீலரில் ஒருவர் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.பட்டுக்கோட்டை அடுத்த மன்னாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (45). இவர் சம்பவத்தன்று அவரது டி.வி.எஸ்., விக்டர் டூவீலரில் பட்டுக்கோடையில் இருந்து மன்னாங்காடு சென்றார்.அப்போது துவரங்குறிச்சி மெயின் ரோடு அருகே எதிர்பாராத விதமாக நாய் ஒன்று கருணாநிதியின் டூவீலர் முன் பாய்ந்தது. இதில், கருணாநிதி நிலைதடுமாறி கிழே விழுந்தார். படுகாயமடைந்த கருணாநிதி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். பட்டுக்கோட்டை தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Top
* 6.பெண்கள் தினத்தில் தஞ்சையில் தர்ணா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன் இளம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் சார்பில் பெண்கள் தினத்தை முன்னிட்டு மாலை நேர தர்ணா நடந்தது.தேசிய தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். தேசிய பொருளாளர் தமிழ்கவி, தேசியக்குழு உறுப்பினர் தனஞ்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியக்குழு உறுப்பினர் விக்டோரியா மேரி வரவேற்றார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மனோகரன், முன்னாள் தேசிய பொருளாளர் குமார், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.


குறைந்த பட்ச ஊதியம் 80 ரூபாயாக அமல்படுத்த வேண்டும். எட்டு மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.டி., என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உள்நாட்டு தொழில்களை மேன்மைப்படுத்த வேண்டும். விளை நிலங்களை மனைப்பட்டா போடுவதை தடை செய்ய வேண்டும். முந்திரி தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தில் உள்ள குளறுபடிகளை தடுத்திட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும். வேலையில்லா இளைஞர்களின் ஊக்கத்தொகையை முறையாக வழங்க வேண்டும். அதனை உயர்த்திட வழிவகுக்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக மாற்ற வேண்டும், என வலியுறுத்தினர். தேசியக்குழு உறுப்பினர் கஜேந்திரன் நன்றி கூறினார்.
Top
* 7.மகன், தங்கையை அரிவாளால் வெட்டியவர் குடந்தையில் கைது

கும்பகோணம்: கும்பகோணம் அருகே குடிபோதையில் மகனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் அருகே மாங்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் செல்வம் (35). இவர் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனால், இவரது மனைவி தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த செல்வம் தனது மனைவியை அடிக்க சென்றபோது செல்வத்தின் தங்கை உஷாவும், மகன் சசிகுமாரும் தடுத்தனர். இதனால், செல்வம் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சசிகுமாரையும், தங்கை உஷாவையும் வெட்டினார். இதில், சசிகுமார் தலை, உஷா வலது முன்கையிலும் அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சசிகுமாரும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உஷாவும் சேர்க்கப்பட்டனர். திருநீலக்குடி போலீஸார் விசாரித்து செல்வத்தை கைது செய்தனர்.
Top
* 8.8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு: தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர்:தஞ்சை சாலையில் நகரமுடியா மல் கிடந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.காடுகளில் கிடக்கும் மலைப் பாம்பு காடுகள் இல்லாத தஞ்சை நகர சாலையில் "உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்ற நிலையில் நகர முடியாமல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் வண்டிகாரத் தெருவில் சாலையின் குறுக்கே மலைப்பாம்பு கிடப்பதாக நேற்று காலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நிலைய தீயணைப்பு வீரர் இளஞ்செழியன் தலைமையில் தீயணைப்புவீரர்கள் சென்றனர். அங்கு 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையின் குறுக்கே நகர்ந்து செல்ல முடியாமல் கிடப்பதைக் கண்டனர். மக்கள் பாம்பை ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண் டிருந்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை பிடித்து சாக்குப் பையில் போட்டனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வனத்துறையினர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்று பாம்பை எடுத்து சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:இந்தப் பகுதியில் காடுகள் இல்லை. அதனால் மலைப்பாம்பு தஞ்சைக்கு வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து பெரிய மரங்களை வெட்டி எடுத்து வரும் போது, மரப்பட்டைகளுக்கு இடையில் இதுபோன்ற பாம்புகள் இருக்கும். பாம்பு கிடந்த பகுதியில் அதிக அளவில் மரப்பட்டறைகள் உள்ளன. மரங்களை லாரிகளில் எடுத்து வரும் போது அதில் இருக்கும் பாம்புகள் கீழே விழுந்து விடுவ துண்டு. விழுந்த வேகத்தில் சில நேரங்களில் மறைவான இடத்திற்கு பாம்பு சென்றுவிடும். அதிக அளவில் உணவு உட்கொண்டிருந்தால் மறைவான இடத்திற்கு செல்ல முடியாமல் இதுபோன்று சாலைகளில் கிடக்கும். இவ்வாறு மீட்கப்படும் பாம்புகள் அருகில் உள்ள காடுகளில் பாதுகாப்பாக விடப்படும். இவ்வாறு வனத்துறையினர்கூறினர்.


டி.வி வழங்கல்:திருவையாறு:திருவையாறு அருகே கண்டியூரில் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் அரசு இலவச டிவிக்கள் வழங்கினார்.திருவையாறு ஒன்றியக்குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் உலகநாயகி, ஒன்றியக்குழு உறுப்பினர் விசுவஜித்காடேராவ், திருவையாறு பேரூராட்சி துணைத் தலைவர் சாமிநாதன், கைலாசநாதர் கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாரூக், தாசில்தார் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சித் தலைவர் அயூப்கான் வரவேற்றார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மருதபிள்ளை நன்றி கூறினார்.மனுநீதி நாள் முகாம்பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி தெற்கு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 10ம்தேதி நடக்கிறது. ஆர்.டி.ஓ. முகாமில் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிகிறார்.
Top
* 9.பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

திருவையாறு:திருவையாறு ஒளவை மழலையர் தொடக்கப் பள்ளியில் 17வது ஆண்டு நிறைவு விழா நடந்தது.பள்ளித் தாளாளர் கண்ணகி தலைமை வகித் தார். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். சௌமியாஸ்ரீராமசேதுபதி முன்னிலை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அரவிந்தன் பரிசு வழங் கினார். விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார். விழாவில் சிறந்த பெற்றோருக்கான விருதுகள் வழங் கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஆசிரியைகள் வசந்தலட்சுமி, துர்காதேவி, தமிழ்ச்செல்வி மற்றும் சங்கீதா ஆகியோர் தொகுப் புரையாற்றினர். ஆசிரியை சுஜிதா நன்றி கூறினார்.